முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

01

வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பாக கள்ள மௌனம் காக்கிறார் கக்கீம் – சட்டத்தரணி மௌசூர் மௌலானா


கண்டியில் தேர்தலில் போட்டியிடவேண்டுமென்ற காரணத்தினால் வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவூப் கக்கீம் மௌனம் காத்து வருகிறார் என சட்டத்தரணி மௌசூர் மௌலானா குற்றம் சாட்டியுள்ளார்.

சேதாரம் இல்லாத விட்டுக்கொடுப்பு பற்றி ரவூப் கக்கீம் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு சேதாரம் பற்றியும் புரியவில்லை, செய்கூலி பற்றியும் புரியவில்லை.

செய்கூலி பற்றித் தெரிந்தவனுக்குத் தான் சேதாரம் பற்றிய வலி தெரியும். வடக்குக் – கிழக்கு இணைப்புத் தொடர்பாக அவர் மௌனம் காத்து வருகின்றார்.

ஏனென்றால் அவர் கண்டியில் தேர்தலில் போட்டியிடவேண்டுமென்றால், அவர் உரித்தோடு வட-கிழக்கு முஸ்லிம்கள் தொடர்பாக உரத்த தொனியில் கருத்துத் தெரிவிக்கமுடியாது.

அதேபோல், தற்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு விம்பமாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பொறிக்குள் வீழ்ந்துள்ளது.

தமிழ், முஸ்லிம் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்படாவிட்டால், இந்தியாவும், அமெரிக்காவும், சீனாவும் இலங்கைக்குள் விளையாடும் சித்து விளையாட்டக்களால் தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் இருப்பு கேள்விக்குறியாக மாறும் எனவும்தெரிவித்துள்ளார்.

கண்டியில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதால் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் வட கிழக்கு இணைப்பு தொடர்பில் தொடர்சியாக அமைதி காத்து வருகின்றார்.-மௌசூர் மௌலானா- (தலைவர் சித்திலெப்பை ஆய்வுமையம்,சட்டத்தரணி)

Posted by Vigneswaran Kajeepan on Montag, 11. September 2017

 

 

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்