முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

sherlin

சினிமாவில் நடிக்கத் தயார்! – ‘ஜிமிக்கி கம்மல்’ ஷெரில்


தனக்குப் பிடித்த நடிகர் அஜித் என்றும், நல்ல வாய்ப்புகள் வந்தால் நடிக்கத் தயார் என்று ‘ஜிமிக்கி கம்மல்’ ஷெரில் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் தற்போது அனைவரும் பார்த்து, பெரும் வரவேற்பைப் பெற்ற வீடியோ என்றால் ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு நடனமாடியது தான். அதனை உருவாக்கியவர்கள் கொச்சியில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் கமார்சஸ் கல்லூரியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்.

அந்த காணொளி பதிவில், தனது நடனத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் ஷெரில். அக்கல்லூரியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் கல்லூரிப் பேராசிரியராக சேர்ந்துள்ளார். ஓணம் பண்டிகைக்காக ஏதாவது வித்தியாசமாக வீடியோ பதிவு செய்யலாம் என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து இதனை உருவாக்கியுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் தனக்கு கிடைத்த வரவேற்பு குறித்து ஷெரில், “இதனை நான் எதிர்பார்க்கவில்லை. நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் சினிமாவில் நடிக்கத் தயார் தான். ஆனால் வீட்டில் ஒப்புக் கொள்வார்களா என்று தெரியவில்லை. தற்போதைக்கு எதுவும் முடிவு செய்யவில்லை. தமிழில் எனக்குப் பிடித்த நடிகர் அஜித் தான்” என்று தெரிவித்துள்ளார்.

ஷெரிலுக்கு ரசிகர் மன்றம் என்ற பெயரில் சமூக வலைதளத்தில் பல்வேறு பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், இவர் நடனமாடும் வீடியோ பதிவும் சுமார் 9 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்