முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

image_1483335289-3fd5ef48e9

முப்படைகளின் நீர்க்காகம் போர்ப்பயிற்சியை நேரடியாகப் பார்வையிடவுள்ளார் மைத்திரி!


சிறிலங்காவின் முப்படைகளும் இணைந்து திருகோணமலை குச்சவெளிக் கடற்பரப்பில் மேற்கொள்ளும் நீர்க்காகம் பயிற்சி -7-2017 என்ற போர்ப்பயிற்சி ஒத்திகையை சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன நேரடியாகப் பார்வையிடவுள்ளார்.

இப்பயிற்சியைப் பார்வையிடுவதற்கு சிறிலங்கா இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்புவிடுத்திருந்தார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான விஜேவர்த்தன, பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன ஆகியோரும் இந்தக் கூட்டுப் பயிற்சியை பார்வையிடவுள்ளனர்.

13 நாடுகளைச் சேர்ந்த 69 படையினர் மற்றும் அதிகாரிகளும் இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கின்றனர்.

கடந்த 3ஆம் நாள் மின்னேரியாவில் தொடங்கிய இந்தக் கூட்டுப் பயிற்சி, வரும் 24ஆம் நாள் வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

 

 

 

 

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்