முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

_97780910_sep

காணாமற்போனோர் பணியகத்தை செயற்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட்டார் மைத்திரி!


காணாமற்போனோர் அலுவலகத்தை செயற்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலில் சிறிலங்கா சிறிலங்காஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார்.

காணாமற்போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்படவுள்ளது.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் என்ற வகையில் மைத்திரிபால சிறிசேன இந்த வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டுள்ளார்.

இது தொடர்பாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், காணாமல்போனோர் அலுவலகத்தின் கடமைகள், அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவரப்படுகின்றது.

2016ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் காணாமல்போனோர் நபர்கள் பற்றிய அலுவலகம் தாபித்தலும், நிர்வகித்தலும், பணிகளை ஆரம்பித்தலும் என்ற சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

சட்டம் நிறைவேற்றப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ளநிலையிலும் எந்தவொரு செயற்பாடுகளும் முன்னெடுக்காமை தொடர்பாக சர்வதேச சமூகம் தமதுஅதிருப்தியை வெளியிட்டிருந்தன.

குறிப்பாக தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 50வது கூட்டத் தொடரில் உரையாற்றிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் அல் ஹுசைன்இ இந்த அலுவலகம் ஆரம்பிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் குறித்து சுட்டிக்காட்டி விரைவாக நிறுவப்பட வேண்டும் என வலியுறுத்தி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

 

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்