முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

Wigneswaran1

ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்களைப் பகிர்ந்தால் அது எந்நேரமும் பறிக்கப்படலாம் – வடமாகாண முதலமைச்சர்!


ஒற்றையாட்சியின் கீழ் மாகாணங்களுக்கு எந்தகைய அதிகாரங்களைப் பகிர்ந்தாலும், அவை மீளப் பெறக்கூடிய அபாயம் உள்ளதாகவும், சமஷ்டி முறையிலான தீர்வே அறுதியானதாகவும், உறுதியானதாகவும் அமையும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிரபல அரசியல் விமர்சகரான குசல் பெரேராவின் நூல் வெளியீடு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று மாலை நடைபெற்றது. அதில் வடமாகாண முதலமைச்சரும் கலந்துகொண்டார்.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் ‘அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு முழுமையான அதிகாரப் பகிர்வு வழங்கினால் சமஷ்டிக் கோரிக்கைகைவிடப்படுமா எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த வடமாகாண முதலமைச்சர், அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளில் எது சரியோ அதனைச் சரியென்றும், எது பிழையோஅதனைப் பிழையென்றும் சுட்டிக்காட்டி வருகின்றேன். இதில் தவறிருப்பதாக நான் நினைக்கவில்லை. மகிந்தராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவார் என்ற அச்சத்தைப் பரப்பி சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது.

இந்த அரசாங்கம் எதனையும் செய்யவில்லையென நான் சொல்லவில்லை. இருந்தாலும், வட-கிழக்கு இணைப்பு, வட-கிழக்கில் இராணுவப் பிரசன்னத்தைக் குறைத்தல், காணி விடுவிப்பு உள்ளிட்டவிடயங்களில் காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கவில்லை. அதனைச் செய்யவேண்டுமென்றே எடுத்துரைக்கின்றேன்.

அத்துடன் மாகாணசபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை மீளப் பெறமுடியாதவாறான அதிகாரப் பகிர்வே தேவை. அதனை சமஷ்டித்தீர்வின் மூலமே பெறமுடியும். அதற்கு ஒற்றையாட்சி தீர்வாகாது எனத் தெரிவித்துள்ளார்.

 

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்