முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

thumb_large_18

சுவிஸ்குமாருடன் தலைவர் பிரபாகரனை ஒப்பிட்ட இளஞ்செழியன்!


புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ் குமார் சம்பவம் நடைபெற்றபோது அவ்விடத்தில் இருக்கவில்லையென எதிரிதரப்பு சட்டத்தரணி தெரிவித்ததற்கு குற்றத்தைப் புரிவதற்கு பிரதான சூத்திரதாரி சம்பவ இடத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எனத் தெரிவித்த இளஞ்செழியன் இலங்கை மத்திய வங்கியின் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டு மற்றும் தாக்குதல்தாரியை நேரடியாக அனுப்பி வைத்தவர் பிரபாகரன் எனவும் அவர் சம்பவ இடத்தில் இருக்கவில்லையெனச் சுட்டிக்காட்டினார்.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டுப்பாலியல் வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று எதிரி தரப்பு தொகுப்புரை இடம்பெற்றது.

பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளான மஹிந்த ஜயவர்தன, ஆறுமுகம் ரகுபதி மற்றும் கேதீஸ்வரன் ஆகியோர் இன்று தமது தொகுப்புரைகளை வழங்கியிருந்தனர்.

பிரதிவாதிகளின் தொகுப்புரையின்போது,

சந்தேகநபர்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமது கட்சிக்காரர்களை விடுவிக்குமாறு சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கொலை சம்பவத்துடன் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என தெரிவித்த பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை எனவும் கூறியுள்ளனர்.

கறுப்புக்கண்ணாடி அணிந்து கொண்டு சுவிஸ்குமார் வித்தியாவை பார்த்தார் என யாராலும் கூற முடியாது எனவும், கறுப்புக்கண்ணாடி போட்டிருக்கும் ஒருவர் யாரைப் பார்க்கிறார் என்பது தெரியாது எனவும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

அதனை உறுதிப்படுத்தும் வகையில், கறுப்புக்கண்ணாடி ஒன்றை அணிந்து மன்றில் சட்டத்தரணி கேதீஸ்வரன் பாவனை செய்து காட்டியுள்ளார்.

இதன் அடிப்படையில், ஏழாவது சாட்சியமாக சாட்சி வழங்கிய இலங்கேஸ்வரனின் சாட்சியங்கள் பொய்யானவை எனவும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளின் தொகுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, பிரதிவாதிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் உரிய வகையில் நிரூபிக்கப்படவில்லை எனவும் அவர்களை விடுதலை செய்யுமாறும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது, நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், சட்டத்தரணி கேதீஸ்வரனை மீண்டும் அந்த கறுப்புக்கண்ணாடியை அணியுமாறும், பார்வையாளர் ஒருவரிடம் சட்டத்தரணி எதனை நோக்கிப் பார்க்கிறார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டத்தரணி நீதிபதிபகளை நோக்குகிறார் என பார்வையாளர் பதில் வழங்கிய போது, ஒருவர் கறுப்புக்கண்ணாடி அணிந்துகொண்டு குறிப்பாக எதை நோக்குகின்றார் என கூற முடியாது என நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கூறியுள்ளார்.

எனினும், கண்ணாடி அணிந்திருப்பவர் திரும்பும் திசையை வைத்து எதைப் பார்க்கிறார் என்பதை அவதானிக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய, குறித்த கறுப்புக்கண்ணாடியை நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனும் அணிந்து பாவனை செய்து காட்டியுள்ளார்.

குற்றம் இடம்பெறுவற்கு முன்னரும், அதன் பின்னருமான நடத்தைகளில் 4,7, 8, 9 ஆகிய பிரதிவாதிகளுடன் 5 ஆம் இலக்க பிரதிவாதி கூட்டாகவே இருந்துள்ளார் என சாட்சியங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2015 மே மாதம் 12 ஆம் திகதி காலை 11 மணியளவில் 5 ஆம் இலக்க பிரதிவாதி, ஏனைய பிரதிவாதிகளுடன் ஹயஸ் வாகனத்தில் இருந்துள்ளமை தொடர்பில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, இந்தக் குற்றத்தைப் புரிவதற்கு பிரதான சூத்திரதாரி சம்பவ இடத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் , தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டு மற்றும் தாக்குதல்தாரியை நேரடியாக அனுப்பி வைத்தவர் பிரபாகரன் என நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பிரபாகரனுக்கு கொழும்பு தெரியாது. கொழும்பைப் பார்க்காத பிரபாகரன், சம்பவத்துடன் தொடர்புபட்ட முதலாவது சந்தேகநபர் என்பதால், இலங்கையின் நீதிமன்றத்தால் அவருக்கு 200 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

எனவே, சதித்திட்டம் தீட்டிய சூத்திரதாரி சம்பவ இடத்திற்கு நேரடியாக வரவேண்டும் என அவசியம் இல்லை எனவும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் இறுதித் தீர்ப்பிற்கான திகதி அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய இம்மாதம் 27 ஆம் திகதி வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.

 

 

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்