முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

poojitha

ஜனாதிபதிக்கு எதிராக செயற்படக் கூடாது – பொலிஸ் மா அதிபர் பூஜித எச்சரிக்கை


ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிராக செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக சமரசமற்ற முறையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர எச்சரித்துள்ளார். குருநாகல் மல்லவப்பிட்டியவில் கடந்த 12 ஆம் திகதி நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிராமிய சூழ்நிலையில் இருந்து வந்தவர். நல்ல மனம் கொண்டவர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறந்த அறிவாளி.

சர்வதேச அளவில் செல்வாக்கு மிக்கவர். இந்த இருவரின் கூட்டணியை மீறி எவராலும் எதையும் செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் வெளிநாடுகளின் பணத்துக்காக ஒருசில அரச சார்பற்ற நிறுவனங்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தொடர்பில் வெளிநாடுகளில் போலியான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்காக அவர்களின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் பெருந்தொகைப் பணம் வைப்பிலிடப்பட்டு வருகின்றது. அவ்வாறான நபர்கள் தொடர்பில் கடுமையான அவதானத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

பணத்துக்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் மீது சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் மீது எதுவித சமரசமும் இன்றி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர கடுமையாக எச்சரித்துள்ளார்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்