முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

suresh - sam

சுரேஷ் முடிவை முதலில் எங்களுக்கு அறிவிக்க வேண்டும் அதன் பின்னரே பதில் – சம்பந்தன்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் விலகுவதெனில் அந்த முடிவை சுரேஷ; பிறேமச்சந்திரன் முதலில் கூட்டமைப்பின் தலைமைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கட்டும். அதன் பின்னர் கூட்டமைப்பு உரிய பதில் வழங்கும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழ்மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றுடன் இணைந்து, புதிய தேர்தல் கூட்டு ஒன்றை அமைக்க உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைவர் சுரேஷ; பிறேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் முதலே ஈ.பி.ஆர்.எல்.எவ் அதில் அங்கம் வகித்து வருகின்றது. இப்போது இந்தக் கட்சி கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக அதன் தலைவர் சுரேஷ; பிறேமச்சந்திரன் அறிவித்துள்ளார் என ஊடகங்கள் மூலம் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆயினும் அவர்களின் முடிவு பற்றி இதுவரை எமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

உள்ளூராட்சித் தேர்தலில் நாங்கள் கூட்டமைப்பாகவே போட்டியிடுவோம். நாங்கள் யாரையும் கூட்டமைப்பில் இருந்து விலகிச் செல்லும்படி சொல்லவில்லை. அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுவதை நாமும் விரும்பவில்லை. எதுவானாலும் சுரேஷ; எங்களுடன் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

 

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்