முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

north

வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் நாளை யாழ் செயலகம் முன்னால் போராட்டம்


வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினால் நாளை புதன்கிழமை யாழ் மாவட்டச் செயலகம் முன்பாகப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்கக் கோரி முன்னெடுக்கும் இந்தப் போராட்டம் நாளை காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இது குறித்து வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில்,

எம்மால் தொடர்ச்சியாக 143 நாட்கள் நடாத்தப்பட்ட போராட்டத்தின்போது, பட்டதாரிகளைப் பயிற்சி அடிப்படையில் அபிவிருத்தி உதவியாளராக இந்த வருடத்துக்குள் நியமிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் எமது போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் இதுவரை நியமனங்களை வழங்குவதற்கான எவ்விதச் செயற்பாடுகளும் நடைபெறவில்லை. இதனால் மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.

போராட்டத்தின்போது வடக்கு முதலமைச்சர், ஆளுநர், யாழ் அரச அதிபர் ஆகியோர் ஊடாகப் பிரதமருக்கு மனு கையளிக்கப்படவுள்ளது. எனவே அனைத்துப் பட்டதாரிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டு பலம் சேர்க்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்