முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

vikknewswaran

தமிழ்மக்கள் பேரவையின் முடிவுக்கு மாறாகக் கருத்து வெளியிட வேண்டாம் – வடக்கு முதலமைச்சருக்கு அழுத்தம்


தேர்தலுக்கான புதிய அரசியல் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் நடவடிக்கைகளுக்குத் தமிழ்மக்கள் பேரவை அனுசரணை வழங்கும் முடிவுக்கு மாறாகக் கருத்து எதனையும் வெளியிட வேண்டாம் என்று தமிழ்மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களுள் ஒருவரான முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்குக் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக அறிய வந்துள்ளது.

தமிழ்மக்கள் பேரவை நேரடியாக தேர்தல் அரசியலில் ஈடுபடாது, மக்கள் இயக்கமாகவே செயற்படும் என்று தாம் திரும்பத் திரும்பக் கூறி வரும் நிலையில், பேரவையின் ஏற்பாட்டில் புதிய அரசியல் கூட்டமைப்பு என்று செய்திகள் வெளியாகியுள்ளமை குறித்து முதல்வர் விக்னேஸ்வரன் கடும் அதிருப்தியும், விசனமும் அடைந்திருக்கிறார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

இந்த முடிவிலிருந்து தாம் விலகியிருக்கின்றார் என்ற அறிவிப்பை முதலமைச்சர் நேற்று விடுப்பதற்குத் தயாரானார் என்றும், அப்படிச் செய்ய வேண்டாம் என்று அழுத்தம் கொடுக்கும் வகையில் பேரவையைச் சேர்ந்த சிலர் நேற்று மாலையும் முன்னிரவும் அவரைச் சந்தித்தனர் எனவும் அறிய வந்துள்ளது.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்