முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

rizad-badurdeen

முஸ்லிம்கள் முதுகில் நிரந்தர அடிமை சாசனம் எழுதப்படும்- அமைச்சர் ரிஷாத் அச்சம்


புதிய அரசியல் யாப்பின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் முதுகின் மீது நிரந்தரமான அடிமை சாசனமொன்று எழுதப்படும் அபாயம் இருப்பதாக அஞ்சுகிறோம் என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

பெண் எழுத்தாளர் எஸ்.யு. கமர்ஜான் பீ.பி. எழுதிய ‘நான் மூச்­ச­யர்ந்த போது’ எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா வத்­தளை ஹூணுப்பிட்டி சாஹிரா மகா வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அந் நிகழ்வில் பிரதம விருந்­தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்தார்.

தேர்தல் முறை மாற்றம், புதிய யாப்பு உருவாக்கம், நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு ஆகிய மூன்று விடயங்களும் முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தளவில் பாதிப்பான, ஆபத்தான நிலையையே ஏற்படுத்தும் என நாம் கருதுகிறோம்.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை மாற்றி சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளை செல்லாக்காசாக மாற்றுவதற்கான முயற்சி மிக வேகமாக நடந்தேறி வருகின்றது. அத்துடன் கடந்த காலங்களில் பாராளுமன்ற முறைகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் போல, மீண்டும் இந்த முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தேர்தல் முறையை மறுசீரமைக்க வேண்டுமென அரசு வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றது.

முஸ்லிம் சமூகத்தினது பாரிய பங்களிப்பினாலும் பல்வேறு அர்ப்பணிப்புக்களினாலும் நாம் விரும்பி உருவாக்கிய நாட்டுத் தலைமைகள் இவ்வாறான புதிய முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதனால், அதன் மூலம் நமக்கு வரப்போகும் ஆபத்துக்கள் குறித்து நாம் கண்திறந்து பார்க்காமல் கண்மூடித்தனமாவே இருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்