முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

fish

மட்டக்களப்பில் வலைகளில் சிக்கியவை பாம்புகளா? – சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை ஆணையாளர் விளக்கம்!


மட்டக்களப்பு, கல்லடி கடற்பரப்பிலிருந்து, மீனவர்களின் வலைகளில் சிக்குண்ட பாம்புகள், கடற்பாம்புகள் அல்ல எனவும் அவை விலாங்கு மீன் இனத்தைச் சேர்ந்தவை என்று தெரியவந்திருக்கிறது.

அவை விலாங்கு மீன் இனத்தினைச் சேர்ந்த சேர்ந்த ஆங்குஇலா (Anguilla) என்ற மீனினமாகும் எனவும், சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு ​அதிகார சபையின் பொது ஆணையாளர் பேராசிரியர் டர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.

ஆறுகள், ஏறிகள் மற்றும் களப்புகளில் வாழும் இந்த மீனினங்கள், தங்களது இனப்பெருக்கத்துக்காக, களப்புகளினூடாக கடலுக்குள் பிரவேசித்து, பாரிய தொகையாக ஒன்றுதிரண்டு முட்டையிடுவதாகவும் பின்னர், 2 மற்றும் 3 அங்குலம் நீளமான மீன் குஞ்சுகளாக அவை மீண்டும் களப்பினூடாக ஆறுகள் ஏறிகளைச் சென்றடைவதாகவும் அங்கேயே அவை தொடர்ந்து வளர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இனப்பெருக்கத்துக்காக கடலுக்குச் செல்லும் இவ்வகை மீனினங்கள், கடலிலிருந்து தொலைதூரம் செல்வதால், அவை குறித்து கண்டறிய முடிவதில்லை என்று தெரிவித்துள்ள பேராசிரியர்,
இம்மீனினங்கள் பிடிபட்டமையானது, சுனாமியோ அல்லது வேறு ஏதேனும் அனர்த்தத்துக்கோ வலிவகுக்கும் என்று கூறப்படும் செய்தியானது, வெறும் மூட நம்பிக்கையாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்