முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

chanrakumar

மு.சந்திரகுமார் தலைமையில் கிளிநொச்சியில் சுயேட்சைக் குழு கட்டுப்பணம் செலுத்தியது!


ஈபிடிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், சமத்துவம் , சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு என்ற பெயரில் சுயேட்சையாக தேர்தலை எதிர்கொள்கின்றார்.

கிளிநொச்சி மாவட்ட தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் அவரும் அமைப்பின் உறுப்பினர்களும் இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

கரைச்சி, பூநகரி, பளை ஆகிய பிரதேசசபைகளுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் கருத்து தெரிவித்த அந்த அமைப்பின் உறுப்பினர், சுப்பையா மனோகரன்,

இந்த உள்ளுராட்சி தேர்தலில் நாங்கள் சுயேட்சையாக கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேசசபைகளிலும் போட்டியிடுகின்றோம். தற்போதுள்ள நிலைமைகளின் படி இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தலைமையில் சுயேட்சையாக போட்டியிடுகின்ற எங்களுடைய அமைப்புக்கு அதிக ஆசனங்களை பெற்றுக்கொள்ள கூடிய வாய்ப்புக்களே அதிகம் காணப்படுகிறது.

ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றவர்கள் மக்களின் பிரச்சினைகளில் அக்கறை செலுத்தாமையினால் ஏமாற்றமடைந்த மக்களுக்கு அவர்கள் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக இந்த தேர்தல் மக்களாக முன்வந்து ஒவ்வொரு வட்டாரங்களிலும் தங்களுக்கான வேட்பாளர்களை வழங்கி ஆதரவளித்து நிற்கின்றனர்.

எனவே கிளிநொச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தலைமையிலான சுயேட்சை குழுவொன்று வருகின்ற உள்ளுராட்சி தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துவம் என்பதில் எமக்கு அதிக நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்தார்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்