முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

vairamuththu

வைரமுத்து பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – பம்மல் ராமகிருஷ்ணன்


”ஆண்டாள் குறித்து அவதூறாக பேசி, இந்துக்களின் மனதை புண்படுத்திய வைரமுத்து, ஆண்டாள் சன்னதியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். ”இல்லாவிட்டால், அவர் வீட்டை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபடுவோம்,” என, மயிலாப்பூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில தலைவர், பம்மல் ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார்.

தமிழ் நாளிதழ் நடத்திய கூட்டத்தில் பேசிய, கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து அவதூறாக பேசினார். இதற்கு, உலக அளவில், இந்துக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழக பிராமணர் சங்கம், ஆண்டாள் பக்தர்கள் சார்பில், மயிலாப்பூர், மாங்கொல்லையில் நேற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில், பிராமணர் சங்க தலைவர், பம்மல் ராமகிருஷ்ணன் போது ;

இந்துக்களின் தெய்வத் தாயாக, ஆண்டாளை பார்க்கிறோம். திருப்பாவை கொடுத்த ஆண்டாளை, ஒவ்வொரு ஆண்டு மார்கழி மாதத்திலும், போற்றி வருகிறோம். வைரமுத்து, ஆண்டாளை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். இது, இந்துகளின் மனதை, பெரிய அளவில் புண்படுத்தியுள்ளது. அவர், வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது; ஆண்டாள் சன்னதிக்கு சென்று, மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்.

அவருக்கு, ஒரு வார காலம் அவகாசம் கொடுக்கப்படுகிறது. அதற்குள், பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால், அவரின் வீட்டை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தப்படும்.

அதுவரை, தமிழகம் முழுவதும், ஆங்காங்கே, தொடர்ந்து அமைதியான வழியில், இந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவர் என தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், பிராமணர் சங்க, மாநில மகளிர் அமைப்பு செயலர் லலிதா சுப்பிரமணியன்; உபன்யாசகர்களான தாமல் ராமகிருஷ்ணன், அனந்த பத்மநாபாச்சாரியார், வேங்கட கிருஷ்ணன், வி.எஸ்.பி., தலைவர் வேதாந்தன், சிவாச்சாரியார் சங்க தலைவர் முத்துக்குமார குருக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று பேசிய போது தமிழர் என்ற போர்வை யில், இந்துக்களுக்கு எதிராக, சிலர் செயல்படுவதையும், பேசுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

சிறுபான்மையினருக்கு பிரச்னை என்றால், முன்னிற்கும் பலர், பெரும்பான்மையினரை நசுக்கி வருகின்றனர். இந்தியாவில், இந்துக்களின் பலம் குறைந்து வருகிறது. தமிழக அரசின் சின்னமே, ஆண்டாள் குடி கொண்டிருக்கும், கோவில் கோபுரம் தான். அதற்கே, தற்போது, அவமதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசும், வேடிக்கை பார்க்கிறது. இந்த போராட்டம், இந்துக்களுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி. இந்த போராட்டம், மதம், மொழி, வர்ணம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது.

வைரமுத்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் வரை, போராட்டம் தொடரும். நாளை, இந்தியாவில் மட்டு மல்லாமல், இந்துக்கள் வசிக்கும் உலக நாடுகளிலும், இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என அவர்கள் தெரிவித்தனர்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்