முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

201709152156428829_edappadi-palanisamy-says-we-are-only-eligible-to-celebrate_SECVPF

அனைத்து திட்டங்களும் ‘ஜெயலலிதா வழியில் என்கிறார் முதல்வர்!


‘ஜெ., வழியில், அனைத்து நலத்திட்டங்களும், சிறு துளி கூட மாறாமல், சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன,” என, முதல்வர் பழனிசாமி கூறினார்.

தமிழக சட்டசபையில், நேற்று நடந்த, ஜெ., உருவப்பட திறப்பு விழாவிற்கு, தலைமை வகித்து, அவர் பேசியதாவது:

தனக்கென ஒரு வாழ்க்கையை அமைக்காமல், தமிழக நலன் கருதி உழைத்தவர், ஜெயலலிதா. அவரின் ஆட்சிக் காலத்தில், பல சாதனைகள் புரிந்தார்.

அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது. ‘தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள்’ என்ற, பொன்மொழியை வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தவர் அவர்.

சட்டசபையில், த.மா.கா., உறுப்பினர் ஒருவர், மத்தியில் இருந்த, காங்., அரசு, நிதி தராததை சுட்டிக்காட்டி, தேச ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், வார்த்தை ஒன்றை பேசினார். அதை, நீக்க வேண்டும் என, காங்., உறுப்பினர்கள் கோரினர்.அப்போது பேசிய, ஜெ., ‘பிரிவினை கொள்கையில், எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நாட்டின் ஒற்றுமையை என்றும் காப்போம்’ என்றார். அவரது வழியில், சிறு துளி கூட மாறாமல், அனைத்து நலத்திட்டங்களையும், இந்த அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என தெரிவித்தார்.

முன்னிலை வகித்த, துணை முதல்வர், பன்னீர்செல்வம் பேசியபோது:

இந்த ஆட்சியை, மாற்றார் கபளீகரம் செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினோம். ‘இந்த ஆட்சி நீடிக்காது’ என, அவர்கள் சொன்ன ஆரூடத்தை, தவிடுபொடியாக்கி, ஜெ., ஆட்சியே தொடரும் வரலாற்றை ஏற்படுத்தி உள்ளோம்.

எதிர்க்கட்சிகளின் ஆணவப் போக்கை அடக்கி, சட்டசபையை ஆற்றலோடு நடத்த முடியும் என நிரூபித்து உள்ளோம். இந்த ஆண்டும், அடுத்தாண்டும், அதற்கடுத்த ஆண்டிலும், ஜெ., அரசு தான், பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இந்த ஆட்சியை வழிநடத்தும் சிறப்பான பயிற்சியை, ஜெ., எங்களுக்கு வழங்கி உள்ளார். இன்னும், 100 ஆண்டுகள், இந்த இயக்கத்தை நிலைபெறச் செய்வதே, நாம் அவருக்கு செலுத்தும் நன்றிக்கடன் என தெரிவித்துள்ளார்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்