முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

201710120238011586_Discussion-on-Party-Issue-with-Sasikala-says-TTV-Dinakaran_SECVPF

தினகரன் ஆதரவாளர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்!


தினகரன் ஆதரவாளரான, தேனிமாவட்டம் சங்கராபுரம் கூட்டுறவு சங்க தலைவர் திருப்பதி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சின்னமனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சங்கராபுரம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இதன் தலைவரான திருப்பதி, தினகரன் ஆதரவாளர் ஆவார். துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் போடி தொகுதிக்கு உட்பட்ட பகுதி இது. இந்நிலையில் திருப்பதி தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி அவர் மீது இயக்குனர்கள் 7 பேர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதன் மீது கள அலுவலர் தலைமையில் நிர்வாக குழு கூட்டம் நடந்தது. இதில் இயக்குனர்கள் காமாட்சி, ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் கையெழுத்திட்டு தீர்மானம் நிறைவேற்றினர்.

சங்க செயலாளர் கண்ணகி இது தொடர்பாக கூறுகையில், ”மாவட்ட பதிவாளர் அலுவலக பணியாளர்கள் மூலம் நேரடியாக விசாரணை நடந்து நம்பிக்கையில்லா தீர்மான நகல் பெற்று செல்லப்பட்டுள்ளது. இதன் மேல்நடவடிக்கை குறித்து பதிவாளர் முடிவெடுக்க வேண்டும்,” என்றார்.

திருப்பதி கூறுகையில், ”ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்ற தினகரனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். இதனால் என்மீது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கின்றனர். இது குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளேன்,” என்றார்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்