இலங்­கையில் வலுப்­பெறும் இரட்டை அதி­கார மையம் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, June 27, 2014

இலங்­கையில் வலுப்­பெறும் இரட்டை அதி­கார மையம்

தனது இரா­ஜ­தந்­திர நகர்­வுகள் மூலம், இலங்­கையில் இரட்டை அதி­கார மையங்­களை உரு­வாக்க இந்­தியா முயற்­சிப்­ப­தாக, அண்­மையில் ஜாதிக ஹெல உறு­மய குற்­றம் ­சாட்­டி­யி­ருந்­தது நினை­வி­ருக்­கலாம்.
இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் இந்த இரட்டை அதி­கார மையப் போக்கு புதி­தாகத் தோன்­றிய ஒன்றல்ல. ஆனால், ஜாதிக ஹெல உறு­ம­ய­வுக்கு இது புதி­தாகத் தெரியத் தொடங்­கி­யுள்­ள­தற்குக் காரணம், வடக்கு மாகா­ண­ ச­பையின் உரு­வாக்கம் தான்.
அண்­மையில் இலங்­கைக்குப் பயணம் மேற்­கொண்­டி­ருந்த, இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சல்மான் குர்ஷித், வடக்கு மாகாண முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனைச், சந்­தித்துப் பேசி­யது தான், ஹெல உறுமயவின் இந்த சீற்­றத்­துக்குக் காரணம்.
வடக்கு மாகா­ண­ ச­பையை, தனி­யா­ன­தொரு நிர்­வாக மைய­மாக, அதி­கார மைய­மாக ஜாதிக ஹெல உறு­மய போன்ற சிங்­களத் தேசி­ய­வாத அமைப்­புக்கள் பார்க்­கின்றன. இந்த இரட்டை அதி­கார மையத்தை இந்­தி­யாவே உரு­வாக்க முனை­வ­தாக, குற்­றம் ­சாட்­டி­யி­ருப்­பது தான் வேடிக்­கை­யான விடயம்.
ஏனென்றால், இலங்­கையில் இரட்டை அதி­கார மையத்தை உரு­வாக்க இந்­தியா முயற்­சி­களை மேற்­கொண்­டது என்­பது பழைய காலக் கதை. இப்­போது, இந்­தி­யாவை விடவும், இந்த இரட்டை அதி­கார மைய உரு­வாக்­கத்தில் கூடிய பங்கு வகிப்­பது, சிங்­களத் தேசி­ய­வாத சக்­திகள் தான் என்­பதே முக்­கி­ய­மா­னது.
2009 மே மாதம், விடு­தலைப் புலி­களைத் தோற்­க­டித்­த­துடன், நாட்டை ஒன்­று­ப­டுத்தி விட்­ட­தாக, சிங்­களத் தேசி­ய­வா­திகள் போட்ட கணக்கும், அதற்குப் பின்னர், விட்ட தவ­று­களும் தான், இரட்டை அதி­கார மையப் போக்கு தீவி­ர­ம­டையக் காரணம்.
எப்­போது, வடக்கில் ஆயுதப் போராட்டம் தீவிரம் பெற்­றதோ, அப்­போதே இலங்­கையில் இரட்டை நிர்­வாக மையச் சூழலும் உரு­வாகி விட்­டது. திம்புப் பேச்­சுக்­களின் போது இந்த இரட்டை அதி­கார மையப் போக்கு ஓர­ள­வுக்கு வெளிச்­ச­மா­னது.
பின்னர், ஒரு கட்­டத்தில், வடக்கில் பல பகு­தி­களைத் தமது கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருந்த தமிழ்ப் போராளிக் குழுக்கள், தனி­ய­ரசுக் கட்­டு­மான முயற்­சி­க­ளிலும் ஈடு­பட்­டன. அப்­போது இந்தப் போக்கு மேலும் தீவி­ர­மா­னது.
1990 ற்குப் பின்னர், இலங்­கையில் இரட்டை அதி­கார மையப் போக்கு மேலும் வலுப்பெ­று­வ­தற்கு, புலிகள் வடக்கின் மீது கொண்­டி­ருந்த ஆதிக்­கமே பிர­தான காரணம். அதை வைத்து அவர்கள் ஒரு நிழல் அரசையே நடத்­தினர்.
இதன் உச்­சக்­கட்­ட­மாக, 2002ல், ரணில் விக்­ர­ம­சிங்க அர­சாங்­கத்­துக்கும், விடு­தலைப் புலி­க­ளுக்கும் இடையில் ஏற்­பட்ட புரிந்­து­ணர்வு உடன்­பாடு, சர்­வ­தேச அளவில் இரட்டை அதி­கார அமைப்பை அங்­கீ­க­ரிக்கும் வகையில் அமைந்­தது. இதன் கார­ண­மாக, அர­சாங்­கத்­துக்கு கொடுக்­கப்­பட்ட முக்­கி­யத்­து­வத்தை உலகின் ஒரு பகுதி நாடுகள் புலி­க­ளுக்கும் கொடுக்கத் தவ­ற­வில்லை.
இவை­யெல்லாம், சிங்­களத் தேசி­ய­வா­தி­களால் பொறுத்துக் கொள்ள முடி­யாத, அவர்­களால் ஜீர­ணிக்க முடி­யாத விட­யங்­க­ளாக இருந்­தன. அதனால் தான், ரணில்-பிர­பா­கரன் உடன்­பாட்டை கிழித்­தெ­றி­வ­தற்காக தீவிர போராட்­டங்­களை நடத்தி அதில் வெற்­றியும் கண்­டனர்.
விடு­தலைப் புலி­களின் அழி­வுக்குப் பின்னர், இந்த இரட்டை அதி­கார மையப் போக்கும், மறைந்து விடும் என்றே சிங்­களத் தேசி­ய­ வா­திகள் கணக்குப் போட்­டனர். ஆனால், விடு­தலைப் புலிகள் விட்ட இடத்தில் இருந்து, இரட்டை அதி­கார மைய இடை­வெ­ளியை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நிரப்­பி­யதும், அவர்­க­ளுக்கு கூடுதல் அதிர்ச்­சி­யாகி விட்­டது.
ஏனென்றால், ஒற்­றை­யாட்­சியை உறு­திப்­ப­டுத்தி விட்­ட­தாக, கொண்­டாடிக் கொண்­டி­ருந்த அவர்­க­ளுக்கு, தமி­ழர்­களின் பிரச்­சி­னையை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மூலம் அறிந்து கொள்ள முனைந்­ததை, ஏற்றுக் கொள்ள முடி­ய­வில்லை.
தமிழ்­மக்­களின் பிர­தி­நி­தி­க­ளாக, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை, ஓர­ள­வுக்கு உலகம் ஏற்றுக் கொண்ட போது, மீண்டும் இரட்டை அதி­கார மையச் செயல் நிலை தீவி­ர­மா­கி­யது. அமெ­ரிக்­காவும், இந்­தி­யாவும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் நெருக்­க­மான தொடர்பை வைத்­தி­ருப்­பதும், அவ்­வப்­போது, வாஷிங்­டனும், புதுடில்­லியும் அவர்­க­ளுக்கு அழைப்பு விடுப்­பதும், இதன் உச்­சக்­கட்­டங்கள்.
அது­மட்­டு­மல்ல, கொழும்­புக்கு வரும் அமெ­ரிக்க, இந்­தியப் பிர­தி­நி­திகள், அர­சாங்­கத்­து­ட­னான கலந்­து­ரை­யா­ட­லுக்குக் கொடுக்கும் முக்­கி­யத்­து­வத்தை, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் கொடுப்­பது முக்கியமா­னது. இப்­போது, வடக்கு மாகா­ண ­ச­பையின் உரு­வாக்­கத்தை அடுத்து, இந்த இரட்டை அதி­கார மையப் போக்கு மேலும், வலுப்­பெறப் போவது உண்­மையே.
ஏனென்றால், வடக்­கி­லுள்ள மக்­களின் சார்பில் பேச­வல்ல ஒரு அர­சாக, வடக்கு மாகா­ண­ சபை உள்­ளதால், நிச்­சயம் வெளி­நா­டுகள், அத­னுடன் தொடர்­பு­க­ளையும், உறவு­க­ளையும் வலுப்­ப­டுத்­தவே முனையும். குறிப்பாக யாழ்ப்­பா­ணத்தில் வடக்கு மாகாண முதல்­வ­ருடன் பேசிய இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர், சல்மான் குர்ஷித், அவரைப் புது­டில்­லிக்கு வரு­மாறும் அழைப்பு விடுத்­துள்ளார்.
இந்­தியா மட்­டு­மன்றி, ஏனைய நாடு­களும் இதற்கு விதி­வி­லக்­காக இருக்க முடி­யாது. அதிலும், வடக்­கி­லுள்ள மக்கள் பல்­வேறு பிரச்­சி­னை­களை எதிர்­கொண்­டுள்ள சூழலில், இத்­த­கைய உற­வுகள் இன்னும் அதி­க­ரிக்­குமே தவிர குறை­யாது. இந்­த­ நி­லைக்கு இந்­தியா காரணம் என்ற குற்­றச்­சாட்டு வேடிக்­கை­யான விடயம்.
ஏனென்றால், போர் முடி­வுக்கு வந்த பின்னர், கடந்த நான்கு ஆண்­டு­களில், இனப்­ பி­ரச்­சி­னைக்கு சுமு­க­மான தீர்வு ஒன்று எட்­டப்­பட்­டி­ருந்தால், தமி­ழர்­களின் பிரச்­சி­னைகள் குறித்து வெளி­நா­டுகள் பேச வேண்டிய தேவை ஏற்­பட்­டி­ருக்­காது. வடக்கு மாகா­ண­ ச­பை­யுடன் தொடர்­பு­களைப் பேண வேண்­டிய தேவையும் ஏற்­பட்­டி­ருக்­காது.
வடக்கு மாகா­ண ­சபை தமிழ் ­மக்­களால் ஏற்றுக் கொள்­ளப்­பட்ட, அங்­கீ­க­ரிக்­கப்­பட்­ட­தொரு அர­சாக மாற்றம் பெற்­றுள்ள நிலையில், இந்த இரட்டை அதி­காரப் போக்கு தவிர்க்க முடி­யாத ஒன்று. ஏனென்றால், பிரச்­சி­னையின் மைய­மாக வடக்கு இருக்கும் போது, அதனை ஒதுக்கி வைத்து விட்டு இந்­தி­யா­வி­னாலோ ஏனைய நாடுகளினாலோ எதையும் செய்ய முடி­யாது.
அதிலும் குறிப்­பாக, வடக்கு மாகா­ண­ ச­பையை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கைப்­பற்­றி­யதும், அவர்கள் தனிநாட்டைப் பிரகடனம் செய்யப் போவதான, மாயையை உருவாக்கியதும் கூட, வெளிநாடுகள் இரட்டை அதிகார மையத்துக்கு ஆதரவளிப்பதற்கு இன்னொரு காரணம்.
ஏனென்றால், இலங்கைத் தீவு இரண்டாக உடைபடுவதை, பல நாடுகள் ஏற்கத் தயாராக இல்லை. இத்தகைய சூழலில், வடக்குடன் நெருக்கத்தைப் பேணவே வெளிநாடுகள் முனையும். இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காண்பதில் எந்தளவுக்கு இழுபறி ஏற்படுகிறதோ, அந்தளவுக்கு, இரட்டை அதிகார மையப் போக்கும் வலுப்பெறும்.
இந்த உண்மையை உணராமல், ஜாதிக ஹெல உறுமய, இந்தியாவைச் சாட முனைந்துள்ளது வியப்பானதே.

No comments:

Post a Comment

Post Bottom Ad