"பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா?" - யாழில் புலனாய்வாளர்கள் மிரட்டல் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, August 15, 2018

"பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா?" - யாழில் புலனாய்வாளர்கள் மிரட்டல்


யாழ்.நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை சுற்றி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை இராணுவ புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.

நினைவிடம் புனரமைக்கப்படவுள்ள நிலையில் முதற்கட்டமாக நினைவிடத்தை சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் யாழ்.மாநகர சபையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்நிலையில் நேற்றையதினம் மாநகர சபை பணியாளர்கள் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு சிவில் உடையில் வந்தவர் தம்மை இராணுவ புலனாய்வாளர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்டு, பணியாளர்களை அச்சுறுத்தியுள்ளனர்.

"வெளியில் சந்தோஷமா வாழ ஆசையில்லையா? " , "பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா? " என பணியாளர்களை கேட்டு அச்சுறுத்தியுள்ளனர்.

அதனால் அச்சமடைந்த பணியாளர்கள், வேலி அடைக்கும் வேலையை கைவிட்டு அலுவலகம் திரும்பியவுடன், தாம் அந்த பணியில் ஈடுபடமாட்டோம் என தெரிவித்தனர்.

அதனால் , வேலி அடைக்கும் மிகுதி பணிகளை வெளியில் இருந்து தற்காலிக வேலைக்கு பணியாளர்களை அமர்த்தி யாழ்.மாநகரசபை பூரணப்படுத்தியது.

எனினும் தனியார் ஊழியர்களை அமர்த்தி இப்பணியை பார்த்தீபன் நிறைவுசெய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



அதுபற்றிய தகவல் வருமாறு:



தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவுத்தூபியினை சுற்றி பாதுகாப்பு வேலை அமைக்கும் பணியினை இழுத்தடித்து கொண்டிருந்த யாழ் மாநகரசபையை , அது குறித்த தன் விடா முயற்சியினால் , அந்த பணியை தொடங்க செய்திருந்தார் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாநகர சபை உறுப்பினர் திரு பார்த்திபன் பார்த்தீபன் அவர்கள்.

எனினும், அந்த பணி ஆரம்புத்த அடுத்தடுத்த நாட்களில் வேலி அமைக்கும் ஊழியர்களை சிறிலங்கா இராணுவ புலனாய்வினர் மிரட்டியதால் நிறுத்தப்பட்ட பணியை , தனியார் ஊழியர்களை வைத்து , தனது சொந்த சம்பளத்தில் , அந்த புனித பணியை முடித்திருக்கிறார் அவர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad