மகாவலி எல் திட்டத்தின் ஊடாக தமிழர் நிலங்களை ஆக்கிமிக்கும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக முல்லைத்தீவில் அணிதிரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் எம்மக்கள். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் வடக்கு - கிழக்கு மாகாணங்களிலிருந்து தமிழ் மக்கள் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.
தமிழ் வாழ்விடங்களான தென்னமரவாடி, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய இடங்களில் சிங்களக் குடியேற்றவாசிகளுக்கு காணிகளைப் பகிர்ந்தளித்துள்ள மகாவலி அதிகாரசபை, அங்கு சிங்களக் குடியேற்றங்களை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
மகாவலி எல் வலயத் திட்டத்தின் கீழ், 2000 ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டு, வெளியிடங்களைச் சேர்ந்த 6000 சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.
மகாவலி எல் வலயத் திட்டம் முன்னெடுக்கப்படும் பகுதியை பூர்வீகமாகக் கொண்டு ஒருவர் கூட இந்தத் திட்டத்துக்குள் உள்ளடக்கப்படவில்லை.
மகாவலி எல் வலயத் திட்டம் என்ற பெயரில், முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரியே இன்றைய போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது..
No comments:
Post a Comment