பாதுகாப்பு உத்தியோகஸ்தரான யுவதி கிளிநொச்சியில் சடலமாக மீட்பு! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, August 30, 2018

பாதுகாப்பு உத்தியோகஸ்தரான யுவதி கிளிநொச்சியில் சடலமாக மீட்பு!

ருகிலிருந்து இடுப்புப்பட்டி, பியர் ரின்கள் உட்பட தடயப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன

கிளிநொச்சி, பன்னங்கண்டிப் பகுதியிலுள்ள நீர்ப்பாசனக் கால்வாய்க் குழியிலிருந்து 32 வய துடைய பெண் ஒருவரின் சடலம் நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளது. நேற்றுக் காலை அருகிலுள்ள குட்டையில்

மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் சடலம் கிடப்பதைக் கண்டு அங்கிருந்த விவசாயி ஒருவருக்கு தகவல் வழங்கினார். இதனையடுத்து விவசாயி, கிளிநொச்சிப் பொலிஸார் மற்றும் கிராம சேவகர் ஆகியோருக்கு அறிவித்ததையடுத்து சடலம் மீட்கப்பட்டது.



சம்பவ இடத்துக்குச் சென்ற குற்றத்தடயவியல் பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை நடத்தினர்.

கழுத்துப் பகுதியில் காயம் காணப்படுவதுடன், முகத்தில் வாய்ப்பகுதி சேதப்படுத்தப்பட்ட நிலையில் சடலம் காணப்பட்டமையால் கழுத்துப் பகுதி நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கால்களில் கரி படிந்துள்ளமையினால் வைக்கோல் மத்தியில் சடலம் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் சடலம் மேலாடைகள் இன்றி உள்ளாடைகளுடன் காணப்பட்டமையினால் பாலியல் வல்லுறவின் பின்னர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை சடலம் காணப்பட்ட அண்மித்த பகுதிகளில் ஒன்பதுக்கும் மேற்பட்ட சான்றுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கால் சலங்கை, நீலம் மற்றும் மஞ்சள் நிறங்களில் பாதணிகள் இரண்டு சோடி, சிவப்பு மற்றும் நீல நிறப்பேனைகள், பாதுகாப்புத் தரப்பினர் பயன்படுத்தும் இடுப்புப்பட்டி, ஒரு கோர்வையில் நான்கு திறப்புக்கள், பியர் ரின்கள் என்பன கண்டெக்கப்பட்டுள்ளன.



 சடலமாக மீட்கப்பட்ட யுவதி முல்லைத்தீவு முறுகண்டி வசந்தநகரைச்  சேர்ந்த 32 வயதான கறுப்பையா நித்தியகலா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பு உத்தியோகதரின் இடுப்புப் பட்டி மற்றும் இரண்டு நீல மற்றும் சிவப்பு பேனாக்கள் காணப்பட்டுள்ளமையினால் இவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் என சந்தேகம் கொண்ட ஊடகவியலாளர் ஒருவரும் மற்றும் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் இணைந்து கிளிநொச்சியில் உள்ள அனைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களை மேற்பார்வை செய்யும் நிறுவனங்களுக்கு சென்று பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் எவரேனும் கடமைக்கு வரவில்லையா என வினவியிருக்கின்றனர்.

இதன் போது  அறிவியல் நகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஒரு உத்தியோகத்தர் வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.  அதனை தொடர்ந்து ஆடைத் தொழிற்சாலை உத்தியோகத்தர்களுடன் அவரது வீட்டுக்கு சென்று அவர்களிடம் விசாரித்ததன் பின்னர் குடும்பத்தவர்களை அழைத்துக்கொண்டு வைத்திய சாலைக்கு  சென்று சடலத்தை பார்வையிட்டு அடையாளம் கண்டுள்ளனர்.

குறித்த பெண் கணவனால் கைவிடப்பட்டவர் என்றும்  ஜந்து வயதில் மாற்றுத்திறனாளி பெண் குழந்தை ஒன்றும்  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக நேற்றி முன்தினம் இரவு( 7.15 மணிக்கு ஆடைத் தொழிற்சாலையில்  தனது கடமையினை  இவர் முடித்திருக்கின்றார்.

சம்பவ இடத்திற்கு நேற்று பிற்பகல் சென்ற கிளிநொச்சி நீதிவான் மாணிக்கவாசகர் கணேசராஜா சடலத்தைப் பார்வையிட்டதுடன் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை தடயவியல் பொலிஸார் மற்றும் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநானும் ஸ்தலத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad