அம்பாறை தமிழ் குடும்பம் முஸ்லிமாக மாற மறுத்ததினால் தீவைப்பு! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, September 5, 2018

அம்பாறை தமிழ் குடும்பம் முஸ்லிமாக மாற மறுத்ததினால் தீவைப்பு!

அம்பாறை மாவட்டத்தின் வலத்தாப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்மையில் புரம் எனும் கிராமம் சுனாமிக்கு பின்னர் உருவாகிய கிராமம் என்பதுடன் அது தற்போது ஸ்மையில் புரம் என்ற பெயருடன் முழு முஸ்லிம் கிராமமாக மாற்றப்பட்டுள்ளது.

அங்கு ஒரு சில தமிழ் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிப்பதாக இருந்தால் நீங்களும் முஸ்லீமாக இருக்க வேண்டும் என்று அங்குள்ள இஸ்லாமிய மதவாதிகள் தமிழ் குடும்பங்களை அச்சுறுத்தி வந்த நிலையில் பல தடவைகள் சில குடும்பத்தினர்களுக்கு இடையில் கைகலப்பு நடைபெற்று பொலீசில் முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.



இந்த வேளையில் இங்கு வசித்து வரும் சோதிநாதன் சந்திரசேகர் என்ற தமிழ் குடும்பம் ஒன்றை இஸ்லாம் மதத்திற்கு வருமாறு அச்சுறுத்தி அவ‌ர்களது வீடு மற்றும் தொழிலுக்காக பயன்படுத்திய முச்சக்கர வண்டிக்கு தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது கடந்த வெள்ளிக்கிழமை (31) அதிகாலை அம்பாறை வலத்தாப்பட்டி ஸ்மையில் புரத்தில் உள்ள சோதிநாதன் சந்திரசேகர் வீட்டிற்கு வந்த இனந்தெரியாத குழு ஒன்று தங்களது வீட்டுக்கு தீவைத்து கொழுத்தியதாகவும் இதன்போது வீட்டில் இருந்த முச்சக்கர வண்டி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக, குறித்த சம்பவத்தின் பொது தாங்கள் விழித்துக் கொள்ளாது இருந்திருந்தால் தங்களது மூன்று மாத குழந்தை உட்பட அனைவரும் தீயில் எரிந்து இறந்திருப்போம் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருடைய மனைவியின் குடும்பத்தில் இருந்த இது வரை 09 பேர் இஸ்லாம் மதத்திற்கு சென்றுள்ளதாகவும் இக் குடும்பத்தின் பெண் தெரிவித்தார். இவ்வாறு பல குடும்பங்களை பணம் மற்றும் ஏனைய உதவிகளை வழங்கி இஸ்லாம் மதத்திற்கு இணைத்து வருவதாக கூறினார்.  மேலும் எங்களுடைய இந்த இழப்பினை எங்களுடைய பிரதிநிதிகள் கவனத்தில் எடுத்து எங்களுக்கான இழப்பிட்டினை பெற்று தரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad