வடக்கு அமைச்சர் அனந்திக்கு ஆங்கிலம் தெரியாது என்று அவரின் சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்றுத் தெரிவித்தார். இந்தக் கருத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ளும் அபாயத்தை திருமதி அனந்தி சசிதரன் எதிர்நோக்கியுள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்களான திருமதி அனந்தி சசிதரன், க.சிவநேசன் ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி கணேஸ், தனது கட்சிக்காரருக்கு குற்றப் பத்திரம் ஆங்கில மொழியில் வழங்கப்பட்டுள்ளது. அவரால் ஆங்கிலம் வாசிக்கவோ, படிக்கவோ தெரியாது என்று ஆட்சேபனை எழுப்பினார்.
அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி கணேஸ், தனது கட்சிக்காரருக்கு குற்றப் பத்திரம் ஆங்கில மொழியில் வழங்கப்பட்டுள்ளது. அவரால் ஆங்கிலம் வாசிக்கவோ, படிக்கவோ தெரியாது என்று ஆட்சேபனை எழுப்பினார்.
திருமதி அனந்தி சசிதரனின் கையெழுத்துடன், உங்களால் (சட்டத்தரணி) நீதிமன்றுக்குச் சமர்பிக்கப்பட்டுள்ள பதிலி (புரொக்ஸி) ஆங்கிலத்திலேயே உள்ளது. அவரால் தமிழில் பதிலி சமர்பிக்கப்படவில்லையே? ஆங்கிலம் தெரியாது என்றால் எப்படி பதிலியை ஆங்கிலத்தில் சமர்பித்துள்ளார். இந்த மன்று அவருக்கு இதற்கு முன்னர் ஆங்கிலத்தில் கட்டளைகள் அனுப்பியுள்ளது.
அதன்போது ஆங்கிலம் தெரியாது என்ற ஆட்சேபனை எழுப்பப்படவில்லை என்பதை மன்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த ஆட்சேபனையையும் நிராகரித்துள்ளது.
இதன்போது மனுதாரரான டெனீஸ்வரனின் சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ, திருமதி அனந்தி சசிதரனால் ஆங்கிலம் வாசிக்கவோ, படிக்கவோ தெரியாது என்பதை மன்றில் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தனக்கு இந்த வழக்கின் பின்னர் அது உபயோகப்படும் என்றும் கூறியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் திருமதி அனந்தி சசிதரன் ஆங்கிலத்தில் உரையாற்றிய காணொலி மன்றில் சமர்பிக்கப்படும் என்று சுரேன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அவர் ஆங்கிலம் தெரியாது என்று கூறி நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment