தமிழர் எழுவரை விதி 161ஐ பயன்படுத்தி விடுதலை செய்யும் முடிவை ஆளுநருக்கு அனுப்ப தீர்மானம் தமிழ்நாடு அமைச்சரவை முடிவு !
எழுவர் விடுதலையின் முக்கியத்துவம் கருதி இப்பொழுதே அமைச்சரவை கூட்ட தீர்மான நகல் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
சட்டப்பிரிவு 161 தெளிவாக இருக்கிறது. இது முழுக்க மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இதன்படி மாநில அமைச்சரவை எடுத்திருக்கும் இந்த முடிவை ஆளுநர் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
இதை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை. மாநில அமைச்சரவையின் முடிவை செயல்படுத்தும் இடத்தில்தான் ஆளுநர் இருக்கிறார்.
மேற்கொண்டு இந்த விவகாரத்தில் ஆளுநர் மத்திய அரசின் ஆலோசனையை கேட்க தேவையில்லை. 161 சட்டப்பிரிவு மாநில அரசுக்குள்ள அதிகாரம். அதில் மத்திய அரசு தலையிட முடியாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவை கூட்டம் முடிந்தபிறகு அமைச்சர் ஜெயக்குமார் வழங்கிய பேட்டியில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment