தமிழ் தேசிய கூட்டமைப்பில் பங்காளிகளாக இருந்துகொண்டு அதில் சம்பந்தனும், சுமந்திரனும் செய்கின்ற துரோகங்களுக்கு துணை போகின்ற ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளின் தலைமைகள், தற்போது தமக்கு இத்தகைய துரோகத்தில் தொடர்பில்லை என கூறி விலகுவதை தமிழ் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் பேச்சாளர் கூறியதை அது கூட்டமைப்பின் கருத்து இல்லை, அவரது தனிப்பட்ட கருத்து என கூறுவது உலக அரசியலிலே இதுவே முதல் முறை எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
தற்போது சமஸ்டி தேவையில்லை என சுமந்திரன் கூறிய கருத்து தொடர்பாக கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலைவர்களிடம் வீரகேசரி பத்திரிகை கருத்து கேட்டு செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில் புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் சுமந்திரன் கூறிய கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என தெரிவித்துள்ளார். உண்மையில் சித்தார்த்தன் தற்போது கூறுவது தான் சித்தார்த்தனின் தனிப்பட்ட கருத்தாகும். எம்.ஏ.சுமந்திரன் கூட்டமைப்பின் பேச்சாளர். அவர் கூறும் கருத்து கூட்டமைப்பின் கருத்தாகவே அமையும்.
இதே சித்தார்தனே புதிய அரசியலமைப்பு தொடர்பான குழுக்களில் அதிகார பகிர்வு குழுவின் தலைவராக இருக்கின்றார். அதே நேரம் தமிழ் மக்கள் பேரவையிலும் உறுப்பினராகவும் இருக்கின்றார். இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒற்றையாட்சியை வலியுறுத்துகின்ற புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கைக்கு ஆதரவு கேட்டு அதற்கான மக்களின் ஆணையாக உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்ட போது அதற்கு ஆதரவாக வாக்குகளை கேட்டார்.
ஏனெனில் அப்போது சுமந்திரனும் , சம்மந்தனும் சமஸ்டி தேவையில்லை என்பதை வெளிப்படையாக கூறவில்லை. எனவே மக்களுக்கு இந்த உண்மைகள் தெரியாது என்ற நம்பிக்கையில் அப்போது அவர்களோடு ஒற்றுமையாக மக்களிடம் வாக்கு கேட்டார்கள். ஆனால் இப்போது உண்மை அம்பலமாகியுள்ள நிலையில் என்ன செய்வதென்று தெரியாத தர்மசங்கடமான நிலையில் இருக்கிறார்கள்.
சித்தார்த்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பில் யார் ? அதில் ஒரு சிறிய பங்காளி கட்சியின் தலைவர் மாத்திரமே. இந்நிலையில் தனது தரப்பு தான் வாக்கு கேட்ட மக்களிடம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டதை உணர்ந்து அம் மக்களிடம் இருந்து தப்பிக்க இப்போது அது சுமந்திரனின் தனிப்பட்ட கருத்து என்கிறார்.
இதே போலவே ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும். பாராளுமன்ற குழுக்களின் தலமை பதவியை ஒற்றையாட்சிக்கு இணங்கியமையாலேயே பெற்றுக்கொண்டுள்ளார். ஆகவே இவர்கள் அனைவரும் இணைந்து எல்லாம் தெரிந்தே இம் மக்களை ஏமாற்றி வருகின்றார்கள்.
இவர்கள் தமிழ் தேசிய வாதத்தை தமிழ் அரசியலில் இருந்து முற்று முழுதாகவே நீக்குகின்ற செயற்பாட்டை நேர்த்தியாக செய்கின்றார்கள். இந்நில்லையில் தற்போது இவ் உண்மைகள் வெளிவர தொடங்கிவிட்ட நிலையிலும், இன்னும் பல உண்மைகள் வெளிவர இருக்கின்ற நிலையிலும் இவற்றுக்கு எல்லாம் காரணம் வெறுமனே சுமந்திரனும் சம்மந்தனும் மாத்திரமே என அவர்கள் மீது மாத்திரம் பழியை போட்டுவிட்டு தாம் விலகிட பார்க்கின்றார்கள்.
இவ்வாறான நிலையில் இவர்கள் இருவரும் இத்தகைய துரோக தனங்களை செய்வதற்கு துணைபோனவர்கள் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் கட்சிகளின் தலைமைகளேயாவர். எனவே தற்போது இதற்கும் தமக்கு சம்மந்தமில்லை என கூறி அதிலிருந்து தாம் தப்பித்துக்கொள்ள பார்க்கும் புளொட் சித்தார்த்தன் மற்றும் ரெலோ செல்வம் அடைக்கலாநன் ஆகியோரை தமிழ் மக்கள் அனுமதிக்க கூடாது என்றார்.

No comments:
Post a Comment