ஒரு பனங்கொட்டை! ஒரு சொல்லாவது சொல்! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, September 13, 2018

ஒரு பனங்கொட்டை! ஒரு சொல்லாவது சொல்!

சம்பந்தரை தொடர்ந்தும் விமர்சிக்கவேண்டாம். மாவையரை பற்றி நல்ல விதமாக சொல்லுங்கோ. வல்லரசுகளை வளைத்த சுமந்திரனையும் விட்டுவிடாதைங்கோ. அவர்கள் செய்கின்ற நல்ல விசயங்களையும் நீங்கள் வெளியில கொண்டுவரவேண்டும் என அன்பான வேண்டுகோள் ஒன்று எனக்கு வந்தது.
அதுவும் சரிதான். 16 பட்டிகளை (நாடாளுமன்ற எம்பிக்கள்) ஆட்டிப் படைக்கின்ற பெருமகனை பற்றி நல்ல விசயங்களை சொல்லவேண்டும் தான்.
33 ஆண்டுகளாக தொடர்ச்சியான ஒரு சுதந்திரப் போராட்டத்தின் மூலம் திருப்பமுடியாத உலகத்தை திரும்பவைத்த ஒருவர் இருந்தால் அவரை நாம் பாராட்டத்தான் வேண்டும்.
அந்த உலகம் ஏன் திரும்பிப் பார்க்காத மாதிரி அப்போது நடித்தது. ஏன் இப்போது கொஞ்சக்காலம் எங்களுக்காகவே சுற்றுவதுபோல சுற்றியது என்பதை ஆழமாக யோசிக்ககூடாது.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்ற பழமொழி போல, சரிகள் பிழைகள் என்பவற்றை விட்டு, அவர்களுக்கு ஊடாகத்தான் இப்போது எதையும் செய்யமுடியும் எனச்சொல்கின்றார் அந்த நண்பர்.
சரி. அவர் சொல்வதும் சரிதான். ஏதாவது நல்லவற்றை சொல்லவேண்டும்.
மைத்திரி அரசு வந்து பத்து மாதங்கள் கடந்துவிட்டன. ஒரு பிள்ளை தாயின் வயிற்றில் வாழும் காலம் கடந்துவிட்டது.

ஆனால் ஒரு நல்ல விசயம். தமிழர்களின் முக்கியமான பிரச்சனைகள் விடயத்தில் மகிந்தவை விட மைத்திரியால் செய்யவைக்கப்பட்ட ஒரு நல்ல விசயம்.
ஒரு நாள் முழுதும் யோசித்து முடியாமற்போக அவரிடமே கேட்டேன்.
ஒரு சொல்லாவது சொல்!
மறுகணம் அவரிடமிருந்து வந்த பதில் (படம்) இதுதான்.
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான முக்கியமான பிரச்சனையின்போது கூட பனங்கொட்டையும் நடப்படவேண்டும் என்பதை மறக்காமல் இருக்கிறாரே என்ற ஆறுதலுடன் பதிவை நிறைவுசெய்தேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad