மோடியின் சந்திப்பும் தமிழர் தரப்பின் முகமூடிகளும் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, September 13, 2018

மோடியின் சந்திப்பும் தமிழர் தரப்பின் முகமூடிகளும்

கடந்த திங்கட்கிழமை இந்தியாவுக்கு ஐந்துநாள் பயணம் மேற்கொண்ட சிறிலங்கா தூதுக்குழுவினர் அந்நாட்டு பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்திருந்தார்கள்.
அங்கு என்ன விடயம் கதைக்கப்பட்டது என்பதை சம்பந்தன் மனோகணேசன் ரவுப் கக்கீம் டக்ளஸ் என நால்வருமே ஒரு பக்க நீள கதைகளை ஒவ்வொரு ஊடகங்களுக்கும் கொடுத்திருந்தனர்.
நரேந்திரமோடிக்கு அவர்கள் என்ன சொன்னார்கள் என்னவென்பதையும், நரேந்திரமோடி என்ன சொன்னார் என்பதையும், அவர்களே ஊடகங்களுக்கு சொன்னார்கள்.
அவர்கள் சொன்ன கதைகளை வாசித்தால், உண்மையில் பல விடயங்களை பேசியுள்ளார்கள் எனவும், ஒரு மணிநேரமாக இருந்து கதைதிருப்பார்கள் எனவும் தெரியவரும்.


ஆனால் அவர்களுடன் மோடி கதைத்ததோ வெறும் 30 நிமிடங்கள். அதுவும் அந்த குழுவின் பிரதான ஒருங்கிணைப்பாளர் கரு ஜெயசூரியா மற்றவர் நிமால் சிறிபால டி சில்வா.
இவர்களது சந்திப்பு பற்றி நரேந்திரமோடியின் இணையதளத்தில் கூட, தமிழர்கள் பிரச்சனைகள் பற்றி கதைத்தது என்றோ, குறைந்தது எதிர்கட்சி தலைவர் சம்பந்தனை சந்தித்தது என்றோ குறிப்பிடவில்லை.
கரு ஜெயசூரிய தலைமையிலான தூதுக்குழுவை சந்தித்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவை வளர்ப்பது பற்றி ஆராய்ந்தோம் என செய்தி போட்டுள்ளார் மோடி.
A delegation of Members of the Parliament of Sri Lanka called on the Prime Minister today. H.E. Mr. Karu Jayasurya, Speaker of the Sri Lankan Parliament, led the multi-party delegation.
The Parliamentarians noted the historical ties and shared spiritual & cultural heritage of India and Sri Lanka and expressed appreciation for the deepening of relations between the two countries in recent years.
உண்மையில் தமிழர் தரப்பாக தமிழர் தரப்பு பிரதிநிதிகளாக சென்று தமிழர்களின் பிரச்சனைகள் தொடர்பில் குரல் எழுப்பி அதற்கு அழுத்தங்களை கொண்டுவர முயற்சிக்கமுடியும். இப்போது எதிர்கட்சி தலைவர் என்ற தகுதியை பயன்படுத்தி இன்னமும் இலகுவாக தொடர்பாடலை ஏற்படுத்த முடியும். அதனை செய்வதற்கு தயாரில்லை.


சிங்கள பிரதிநிதிகளின் தலைமையில் சிறிலங்கா தூதுக்குழுவாக சென்று சிங்களத்திற்கான அரசியலையே அவர்களால் செய்யமுடியும். செய்யவிரும்புகிறார்கள்.
ஆனால் தமிழர்களுக்கு இன்னொரு முகத்தை காட்டவேண்டும். அதுதான் அந்தக்கதைகள்.
நேற்று மகிந்த சென்று மோடியை சந்தித்திருக்கிறார். சிங்கள தேசத்தை பொறுத்தவரை அது யார் ஆண்டாலும் தனக்கான அரசியலை கச்சிதமாக செய்கிறது.
நாளைய தேர்தல் பரப்புரையில் கைகளை இறுக பொத்தியவாறு, நரேந்திரமோடியை ஒரு தடவையல்ல இரண்டு தடவையல்ல மூன்று தடவைகள் சந்தித்து தீர்வு யோசனைகள் தொடர்பாக அழுத்தம் கொடுத்தேன் என சம்பந்தர் சொல்லும் போது எங்களுக்கு புல்லரிக்கும்.
இது தமிழர் விதி.

No comments:

Post a Comment

Post Bottom Ad