திலீபனின் நினைவு தூபியை சுற்றி வேலியடைப்பதற்கு பணிக்கமர்த்தியவர்கள் இராணுவ புலனாய்வுத்துறையால் விரட்டப்பட,
அந்த வேலையை பொறுப்பெடுத்து, வேலியடைத்து முடித்து, குப்பைகள் நிறைந்தும் விளம்பர பனர்களாலும் நிறைந்திருந்த இடத்தை புனிதப்படுத்தி, திலீபனின் நினைவுப்படங்களை மூன்று மொழிகளில் கட்டியபோது,
அதனை இரவிரவாக கிழித்து எறிந்தனர்.
அதனை இரவிரவாக கிழித்து எறிந்தனர்.
மீண்டும் நினைவுப்படங்களை நிலைப்படுத்தி, ஒவ்வொரு நாளும் நினைவு வணக்க நிகழ்வை உணர்வு மையப்படுத்தி செய்துகொண்டிருக்கும்போது,
யாழ் மாநகர சபையின் ஊடாக "எனது கட்டுப்பாட்டில் நிகழ்வு நடக்கும்" என்ற அகந்தையான அறிக்கையை, ஆனோல்ட் எந்தவித கூச்சமுமில்லாமல் வெளியிட்டார்.
யாழ் மாநகர சபையின் ஊடாக "எனது கட்டுப்பாட்டில் நிகழ்வு நடக்கும்" என்ற அகந்தையான அறிக்கையை, ஆனோல்ட் எந்தவித கூச்சமுமில்லாமல் வெளியிட்டார்.
அதனை எதிர்த்து பலரும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள, மாவை சேனாதிராசாவும் ஆனோல்ட்டின் முடிவு தவறானது என அறிக்கை விட்டார்.
அதனைத் தொடர்ந்து, பொலிசார் நிகழ்வுக்கு தடைபோட்டு வழக்கு தொடர்ந்தனர்.
திலீபன் அண்ணா உயிர்துறந்து 31 வருடங்களின் பின்னர், முதல் தடவையாக இம்முறை நினைவுநிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய சுமந்திரன் வழக்காடி,
நிகழ்வை ஆனோல்ட் செய்வதில் தடையேதும் இல்லை என முடிவாம்.
கடந்த வருடம் நிதிநிறுவன நிகழ்வு செய்து, நினைவுகூரலை குழப்பிய ஆனோல்ட், நிகழ்வுக்கு நாளை வருவாரா?
அவ்வளவு ஏமாளிகளா தமிழர்கள்?
No comments:
Post a Comment