ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு பேரையும் விடுவிக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உண்டு இன்று இந்திய உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ஏற்கனவே தமிழ்நாடு அரசு இதற்கான கோரிக்கையை விட்டிருந்த நிலையில் இம்முடிவு வந்துள்ளமை மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது:
கொலையில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக முடிவு செய்ய தமிழக கவர்னருக்கு அதிகாரம் உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை செய்ய தமிழக கவர்னருக்கு முழு அதிகாரம் உண்டு. 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக கவர்னருக்கு பரிந்துரை செய்யலாம்.2016 ல் அளிக்கப்பட்ட மனு குறித்து கவர்னர் முடிவெடுக்கலாம் எனக்கூறி, மத்திய அரசின் மனுவை இன்று முடித்து வைத்தது.
No comments:
Post a Comment