புதிய அரசியலமைப்பு தொடர்பில் சம்பந்தன் மோடியிடம் வலியுறுத்தல்
முயற்சி தோல்வியில் முடிவடைந்தால் வடக்கு, கிழக்கில் தீவிரப்போக்கைக் கொண்ட தலைமை உருவாவதற்கும் வாய்ப்பு ¤ சம்பந்தன்
அரசியலமைப்புக்கான முயற்சி, 13ஆவது திருத்தத்தை அமுலாக்கும் விடயம் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும். ¤ மனோ
இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியல்யாப்பை பெற்றுத்தருவதற்கு இந்தியா உதவிபுரியவேண்டும். அதற்கான அழுத்தங்களை இந்தியா வழங்கவேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும்
எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் யாப்பை உருவாக்கும் முயற்சி தோல்வியில் முடிவடையுமானால் வடக்கு, கிழக்கில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை விட தீவிரமான போக்கைக் கொண்ட தமிழ் தலைமை உருவாவதற்கும் வாய்ப்பு ஏற்படும் என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். .
சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய எம்.பிக்கள் குழு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு சென்றுள்ளது. இந்தக்குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், ஜே.வி.பி.யின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத், அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, கயந்த கருணாதிலக்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக்குழு நேற்றுக்காலை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப்பேச்சுவார்த்தையின்போதே எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த சம்பந்தன்;
இன்றைய அரசியலமைப்பில் தாங்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதை உணர்வதற்கான வாய்ப்பில்லாமல் இருக்கின்றது. ஆனால் நாம் இலங்கையர் என்ற உணர்வை விரும்புகின்றோம். அந்த வாய்ப்பை மறுக்கும் வகையிலேயே தற்போதைய அரசியலமைப்பு இருக்கின்றது. இதனால்தான் நாம் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றோம். புதிய அரசியல்யாப்பின் உருவாக்கத்திற்கு இந்திய அரசாங்கம் முழுமையான அழுத்தங்களையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கவேண்டும். இதன்மூலமாகவே இலங்கையில் தமிழ் மக்கள் நல்வாழ்வை வாழமுடியும். இந்த அரசியலமைப்பின் உருவாக்கும் முயற்சி தோல்வியில் முடிவடையுமானால் இலங்கையில் அராஜகம் ஏற்படும்.
அதுமட்டுமல்ல வடக்கு, கிழக்கில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை விட தீவிரமான போக்கைக் கொண்ட தமிழ் தலைமை உருவாவதற்கும் வாய்ப்பு ஏற்படும். இன்று வயது முதிர்ந்த நிலையில் நான் இருக்கின்றேன். தற்போதைய நிலையில் உங்களிடம் நான் இந்தக்கோரிக்கையை விடுக்கின்றேன். ஆனால் இந்தக்கோரிக்கையை நீங்கள் ஏற்காது விட்டால் நாளை என்னால் சமாளிக்கமுடியாத புதியதொரு போக்கு வடக்கிலே ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சுகின்றேன்.
2014ஆம் ஆண்டு நீங்கள் இந்தியப் பிரதமராக ஆட்சிபீடம் ஏறியிருந்தீர்கள். நீங்கள் இரண்டு தடவைகள் இலங்கைக்கு வந்தபோதும் கூட நாங்கள் உங்களிடம் கோரிக்கைகளை விடுத்திருந்தோம். இந்த சந்தர்ப்பத்திலும் அந்தக் கோரிக்கைகளை மிகவும் ஆழமாக வலியுறுத்த விரும்புகின்றேன். புதிய அரசியலமைப்பை பெற்றுத்தருவதற்கு இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.
இந்தியாவில் இருக்கக்கூடிய இலங்கை அகதிகள் இலங்கைக்கு மீளவும் வருகை தரவேண்டும். அதற்கான வழிவகைகளை இந்திய அரசாங்கம் செய்யவேண்டும் என்றும் சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார்.
இந்த சந்திப்பில் கருத்துரைத்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன்:
கடந்தமுறை உங்களது இலங்கை விஜயத்தின்போது உங்களை மலையகத்திற்கு அழைத்து சென்று நுவரெலியாவில் எங்களது கூட்டணியினால் மாபெரும் கூட்டத்தை நடத்தியிருந்தோம். அதனை தற்போது நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன். முதன் முதலாக இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கைக்கு வந்து நேரடியாக மக்களை சந்தித்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் வாய்ப்பு அன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள் என நம்புகின்றேன்.
இலங்கையில்வாழக்கூடிய இந்திய வம்சாவளி மக்கள் மத்தியில் தோட்டத் தொழிலாளர்களின் நல்வாழ்வு கருதி நீங்கள் வீட்டுத்திட்டத்தினை விரைவுபடுத்தியுள்ளீர்கள். மேலதிகமானவீடுகளை கட்டித்தருவதாக வாக்குறுதி அளித்துள்ளீர்கள். அந்த உறுதிமொழிகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்காக உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.
அதையும் தாண்டிய பல சமூக, பொருளாதார, கலாசார வேலைத்திட்டங்களை இந்த மக்கள் மத்தியில் மலையக மக்கள் மத்தியிலேயே முன்னெடுப்பதற்கு இந்திய அரசாங்கம் இன்னமும் அதிகமாக அக்கறைகாட்டவேண்டும். அதேபோல் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பாக இன்று இந்த இடத்தில் சம்பந்தனும் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் பல கோரிக்கைகளை முன்வைத்தார்கள். அவர்களின் கோரிக்கைகளுடன் நானும் உடன்படுகின்றேன். எங்கள் அரசாங்கம் புதிய அரசியலமைப்புக்கான செயற்பாட்டை முன்னிறுத்திக்கொண்டிருக்கின்றது. இது அரசாங்கத்தின் செயற்பாடாக இல்லாமல் முழுநாட்டின் செற்பாடாகவும் எதிர்க்கட்சிகளை உள்ளடக்கி முன்னெடுத்து வருகின்றோம். அந்த முயற்சி நடைபெற்று வருகின்றவேளையிலேயே இன்றயை அரசியல் அமைப்புக்கள் உள்ளடக்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு அதனை மேலும் அபிவிருத்தி செய்வதற்கான செயற்பாட்டை இந்திய அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்.
அதற்கான அழுத்தங்களை இந்திய அரசாங்கம் வழங்கவேண்டும். ஏனென்றால் புதிய அரசியலமைப்பு என்றதும் ஏற்கனவே இருக்கக்கூடிய அரசியலமைப்பு என்பதும் இரண்டு வெவ்வேறு விடயங்களாகும். ஆகவே புதிய அரசியலமைப்பை உருவாக்கும் அதேவேளையில் பழைய அரசியலமைப்புக்குள்ளே இருக்கக்கூடிய 13ஆவது திருத்தத்ததை முன்னெடுப்பதும் அதனை முழுமையாக அமுல்படுத்துவதும் சமாந்தரமாக முன்னெடுக்கப்படவேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்;
இந்தியாவின் கடன் உதவித்திட்டத்தின் கீழே இலங்கையில் ரயில் சேவை திட்டங்களுக்கான பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கிழக்கில் மட்டக்களப்பிலிருந்து பொத்துவில்வரை கிழக்கு கரையோரமாக ரயில்பாதை அமைக்கப்படவேண்டும். அதேபோல் வடக்கிற்கு செல்லும் பாதை மன்னார், தலைமன்னார் வரை புதுப்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்படவேண்டும். இதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இங்கு கருத்து தெரிவித்த ஈ.பி.டி.பி.யின் செயலாளரும், பாரளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ்தேவானந்தா:
13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும். அதனை முழுமையாக அமுல்படுத்தினாலேயே தேசிய இனப்பிரச்சினையில் பெரும் பங்கு தீர்க்கப்படும். பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம், போன்றவற்றை இந்திய அரசாங்கம் அபிவிருத்தி செய்யவேண்டும். பலாலியில் இருந்து தமிழ் நாட்டுக்கு விமான சேவைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இந்தியாவிலிருக்ககூடிய பெருந்தொகையான இலங்கை பிரஜைகள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு வழிவகைகளை இந்திய அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். இலங்கை அகதிகளை மீளத் திரும்புவதற்கு முழுமையான அனுமதி வழங்கப்படவில்லை என்று கருத்து நிலவுகின்றது. அதனைத் தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்கள் மீண்டும் தாயகம் திரும்ப வழிஏற்படுத்த வேண்டும் என்று எடுத்துக்கூறியுள்ளார்.

No comments:
Post a Comment