தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் புதிய யோசனை முன்வைக்கின்றார் அமைச்சர் சம்பிக்க
நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட் டுள்ள விடுதலைப்புலி முன்னாள் உறுப்பினர்களை பொது மன்னிப்பின் பெயரில் விடுதலை செய்ய வேண்டும். தனிப்பட்ட மற்றும் பொதுக் குற்றங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் மற்றும் புலி உறுப்பினர்கள் விடயத்தில் உடனடியாக சட்ட நடவடிக்கைகளை எடுத்து நீண்டகால பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சிதலைவர் ஆகியோரிடம் கேட்டுக்கொள்வதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
12 ஆயிரம் புலி உறுப்பினர்களை விடுதலை செய்துவிட்டு 60 பேரை தடுத்து வைப்பதில் எந்த நியாயமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜாதிக ஹெல உறுமைய கட்சியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
இந்த நாட்டில் மிகக் கொடூரமான யுத்தம் ஒன்று இடம்பெற்று முடிவடைந்துள்ளது. யுத்தத்தை வெற்றி கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் இருந்து அதனை வெற்றி கொண்டுள்ளோம். எனினும் ஆயுத யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதே தவிர அதன் பின்னரான அரசியல் முரண்பாடுகள் எவையும் தீர்க்கப்படவில்லை.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் சர்வதேச ரீதியிலும் உள்ளக ரீதியிலும் பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அத்துடன் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற சில குற்றங்களில் பாதுகாப்பு படைகளின் சிலர் சிறையில் உள்ளனர். சிலர் மீது வழக்குகள் தொடரப்பட்டும் அவை விசாரணை மட்டத்திலும் உள்ளன. மறுபுறம் விடுதலைப்புலிகளின் பலர் கைது செய்யப்பட்டு அதில் 12 ஆயிரம் பேர் முன்னைய ஆட்சியில் முழுமைப்படுத்தப்படாத புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமூக மயப்படுத்தப்பட்டனர்.
இவர்களின் விடுதலை எந்தவித அங்கீகாரமும் இல்லாது வழங்கப்பட்டதாகும். மேலும் 60 பேர் அளவில் இன்றும் சிறையில் உள்ளனர். வெவ்வேறு காரணங்களை முன்வைத்து இவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சிலர் மீது வழக்குகள் தொடரப்படவேண்டியுள்ளது. எவ்வாறு இருப்பினும் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் யுத்தம் முடிவுக்கு வந்து பத்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இந்த பத்து ஆண்டுகளில் நாம் யுத்தத்தை வெற்றிகொண்டு எந்த இடத்தில் உள்ளோம் என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும். யுத்தத்தின் பின்னர் பல அரசியல் பிரச்சினைகள் எழுந்துள்ளன, தீர்க்க முடியுமான பல பிரச்சினைகளை கூட தீர்க்க முடியாத நிலைமை உள்ளது.
இந்நிலையில் தான் சர்வதேசமும் சரியான முறையில் நேர்த்தியாக, நியாயமாக சட்ட நகர்வுகளை கையாள வேண்டும். சர்வதேசம் பொறுப்புக்கூறல் இடம்பெற வேண்டும் என்று கூறுகின்றது. இங்குள்ள தமிழ் தலைமைகள் சிலர் இராணுவத்தை மட்டுமே தண்டிக்க வேண்டும், விடுதலைப்புலிகளை அல்ல என கூறிக்கொண்டுள்ளனர். மேலும் சிலர் இராணுவத்தை தண்டிக்க இடமளிக்க முடியாது என கூறிக்கொண்டுள்ளனர். இதில் சட்டம், நீதிப் பொறிமுறை சரியாக செயற்பட வேண்டும் என்றால் இராணுவ குற்றங்களில் அவர்களை தண்டிப்பதை போலவே புனர்வாழ்வு வழங்கி சமூகமையப்படுத்தப்பட்டுள்ள 12 ஆயிரம் விடுதலைப்புலி உறுப்பினர்களையும் மீண்டும் கைது செய்ய வேண்டும்.
ஏனெனில் விடுதலைப்புலிகள் என்ற இயக்கம் இலங்கையில் இன்றும் தடை செய்யப்பட்ட இயக்கமாகும். சர்வதேசத்திலும் தடை செய்யப்பட்ட இயக்கமாக உள்ளது. அவ்வாறு இருக்கையில் அவர்களின் அங்கத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதும் நீதி பொறிமுறைக்குள் வரும் என்பதை மறந்துவிடக்கூடாது. ஆகவே மிகச்சரியாக இந்த விடயத்தில் நீதியை நிலைநாட்ட நினைத்தால் தமிழர் தரப்பிலும் சிக்கல்கள் எழும்.
எவ்வாறு இருப்பினும் இதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், பத்து ஆண்டுகள் கடந்தும் இந்த பிரச்சினைகளை வைத்துகொண்டு அரசியல் செய்யவோ, அல்லது இனவாதத்தை தூண்டிக்கொண்டு செயற்படவோ இனிமேலும் இடமளிக்கக்கூடாது என நாம் நினைக்கின்றோம். நடந்து முடிந்த கதைகளை இனியும் ஆரம்பித்துவைக்கக்கூடாது. இந்த நாட்டில் விடுதலைப்புலிகள் மட்டுமே கலவரங்களை ஏற்படுத்தவில்லை. அதற்கு முன்னர் ஜே.வி.பி. யும் இந்த நாட்டில் கலவரங்களை ஏற்படுத்தியது.
மிகவும் மோசமான சம்பவங்கள் இந்த காலகட்டத்தில் இடம்பெற்றன. அதேபோல் ஜே.வி.பியின் கிளர்ச்சி காலகட்டத்தில் வேறு பல இடதுசாரி அமைப்புகளும் உருவாகி பல கொலைகள், கடத்தல்களை செய்தன . எனினும் கால ஓட்டத்தில் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்களை ஜனநாயக நீரோட்டத்தில் மக்களே இணைத்தனர். இந்த சந்தர்ப்பத்தை அவர்களும் சரியாக பயன்படுத்தி வருகின்றனர். இன்று அரசியல் ரீதியில் அவர்களுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மக்களே அந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். எமக்கு நல்லிணக்கம் கற்பிக்கும் நாடுகளான தென்னாபிரிக்கா, கொலம்பியா மற்றும் ஏனைய பல நாடுகளை எடுத்துக்கொண்டாலும் கூட அவர்களின் நல்லிணக்க பொறிமுறையில் பிரதானமானது பொது மன்னிப்பாகும். இதன் மூலமாக அவர்களால் சமுதாயம் ஒன்றை கட்டியெழுப்ப முடிந்துள்ளது.
ஆகவே இலங்கை விடயத்திலும் இதனையே கையாள வேண்டும். இப்போது அனைத்தையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். ஆகவே 12 ஆயிரம் விடுதலைப்புலிகளை சமூக மயப்படுத்திவிட்டு வெறுமனே 60 பேரை சிறையில் அடைத்து வைத்திருப்பதில் எந்த பயனும் இல்லை. அதேபோல் இராணுவத்தையும் குறைகூறிக்கொண்டு செயற்பட வேண்டிய அவசியமும் இல்லை. இதற்காகவே நாம் ஜனாதிபதி - பிரதமர் - எதிர்க்கட்சி தலைவர் ஆகிய மூவருக்கும் சில காரணிகளை முன்வைக்கவுள்ளோம்.
எமது காரணிகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும், கைவிட முடியாது. அதாவது இறுதி யுத்தத்தில் குற்றம் சுமத்தப்பட்டு சில இராணுவத்தினர் சிறையில் உள்ளனர், விடுதலைப்புலிகளின் சிலரும் உள்ளனர். இவர்களின் குற்றங்கள் குறித்து ஆராய வேண்டும். பொதுவான குற்றங்கள் எவை தனிப்பட்ட குற்றங்கள் எவை என பகுத்து மன்னிப்பு வழங்கக் கூடிய குற்றங்களில் இரண்டு தரப்பினரையும் விடுதலை செய்ய வேண்டும். தனிப்பட்ட குற்றங்கள் இருப்பின் அவற்றுக்கான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.
விடுதலைப்புலிகளின் சார்பில் நேரடியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போன்று போராட்டத்துக்கு உதவியவர்கள், மறைமுக குற்றவாளிகள் என சிலர் உள்ளனர். அவர்களை எல்லாம் தண்டித்து எந்தப்பயனும் இல்லை. நூறுக்கும் குறைவான விடுதலைப்புலி குற்றவாளிகள் மட்டுமே உள்ளனர். 12 ஆயிரம் பேரை விடுதலை செய்துவிட்டு வெறுமனே நூறுக்கும் குறைந்த உறுப்பினர்களை சிறைப்பிடித்து எந்த பயனும் இல்லை. ஆகவே பொது மன்னிப்பின் பெயரில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அதற்கு அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும்.
முக்கியமாக இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட பின்னர் எந்தத் தரப்பினரும் இந்த விடயங்கள் குறித்து பேசக்கூடாது. இதனை வைத்து அரசியல் செய்யவோ, இனவாதத்தை கக்கவோ இடமளிக்கக்கூடாது. இவர்களை விடுதலை செய்வதில் அனைத்து தரப்பினதும் இணக்கப்பாட்டில் பாராளுமன்றத்தில் சட்டம் ஒன்று கொண்டுவந்து அதற்கமைய இவர்களை விடுவிக்க முடியும். அல்லது ஜனாதிபதியின் தலையீட்டில் பொது மன்னிப்பு வழங்க முடியும். இதுவே நல்லிணக்கத்தை நாம் உருவாக்கிக்கொள்ளவும் சர்வதேச கெடுபிடிகளில் இருந்து எம்மை விடுவித்துக்கொண்டு ஒரு நாடாக பயணிக்கவும் நீண்டகால அரசியல் பிரச்சினைகளை வெற்றிகொள்ளவும் மிகச்சிறந்த வழிமுறையாகும் என்றார்.

No comments:
Post a Comment