அதிகார பரவலாக்கலை பிரதானப்படுத்தி சமஷ்டி முறையிலான அரசியலமைப்பே தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வாக அமையும். சமஷ்டி அரசியலமைப்பே வேண்டும் என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் உறுதிபட தெரிவித்தன .
தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறமுடியாது எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான டெலோ அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் புளொட் அமைப்பின் தலைவரும் எம்.பி. யுமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் குறிப்பிட்டனர்.
நாட்டுக்கு சமஷ்டி முறைமை தேவையில்லை என்ற கருத்தினை அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் எம்.பி தெரிவித்திருந்த நிலையில் அவரது கருத்தை வடக்கு முதல்வர் உள்ளிட்ட தமிழர் தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாட்டை வினவியபோதே இதனை குறிப்பிட்டனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான டெலோ அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கூறுகையில்,
எமது மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கான ஒரே தீர்வு அதிகார பரவலாக்கல் மூலமாக ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதாகும். இது எமது கொள்கை என்பதை விட எமது இலட்சியம் என்ற கூற வேண்டும். எமது மக்கள் சுயமாக தமது தீர்மானங்களை எடுக்கவும், தடைகள் இல்லாத கட்டுப்பாடுகளோ வரம்புகளோ இல்லாத அரசியல் நகர்வுகளை எமது பிரதேசங்களில் முன்னெடுக்க எமக்கு சமஷ்டி அரசியல் அமைப்பு அவசியம். அதனை இலக்காக கொண்டே எமது தீர்வுக்கான பயணத்தை முன்னெடுத்து வருகின்றோம். இதில் தமிழ் மக்களை திசை திருப்பவோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்தவோ எவரேனும் முயற்சித்தால் அதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்கப்போவதில்லை.
பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக நாம் எமது நிலைப்பாட்டை உறுதியாக முன்வைத்து வருகின்றோம். எமது மக்கள் மத்தியிலும் நாம் எமது கொள்கையை உறுதியாக முன்வைத்து வருகின்றோம். அவ்வாறு இருக்கையில் சுமந்திரன் எம்.பியின் கருத்தினை கொண்டு நாம் எமது நிலைப்பாட்டை மாற்றிகொள்ளப்போவதில்லை. சமஷ்டி அரசியல் அமைப்பினை பெற்றுக்கொள்வதே எமது ஒரே இலக்காகும், அந்த பாதையில் இருந்து நாம் ஒருபோதும் விலகி நடக்கப்போவதில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைகக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வரையில் நாம் எமது போராட்டத்தை முன்னெடுப்போம் என்றார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இது குறித்து கூறுகையில்,
சமஷ்டி என்ற வார்த்தைப் பதம் புதிய அரசியல் அமைப்பில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் கூறியதாக செய்தித்தாள்களில் படித்தேன். எனினும் அவர் உண்மையாக எவ்வாறான கருத்துக்களை கூறினார் என நான் பார்க்கவில்லை. எவ்வாறு இருப்பினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சமஷ்டி வேண்டாம் என்ற நிலைபாட்டில் இருந்ததில்லை. எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மிகத்தெளிவாக சமஷ்டி அரசியல் முறைமையே தீர்வு என்பதை கூறியுள்ளோம். கடந்த மாகாணசபை தேர்தலிலும் சரி, பொதுத் தேர்தலிலும் நாம் எமது நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாக கூறியுள்ளோம்.
அவ்வாறு இருக்கையில் இப்போது சமஷ்டி வேண்டாம் என கூற சுமந்திரனுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவரது தனிப்பட்ட கருத்துக்களை அல்லது தெளிவில்லாத கருத்துக்களை கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என கூற முடியாது. தமிழ் மக்களின் உண்மையான அரசியல் தீர்வு சமஷ்டி அரசியல் அமைப்பில் தான் தங்கியுள்ளது. பாராளுமன்றத்தில் நாம் உரையாற்றும் சகல சந்தர்ப்பங்களிலும் சமஷ்டி மட்டுமே தீர்வு என்ற கருத்தினை ஆழமாக முன்வைத்து வருகின்றோம் எனக் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment