விக்கியரை காற்சட்டை அணிந்து கஞ்சி குடிக்க வைப்போம் எனச்சொன்ன அணிக்கு ஏமாற்றம்!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, September 18, 2018

விக்கியரை காற்சட்டை அணிந்து கஞ்சி குடிக்க வைப்போம் எனச்சொன்ன அணிக்கு ஏமாற்றம்!!

பா.டெனீஸ்வரனை அமைச்சரவையிலிருந்து நீக்கிய முதலமைச்சரின் முடிவிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை இன்று விலக்கிக் கொள்ளப்படாபோதும் இவ்வழக்கின் மீதான உயர் நீதிமன்ற விசாரணை இம்மாதம் 28 ஆம் திகதி நடைபெறுவதை மேல் நீதிமன்றம் கவனத்தில் எடுத்ததும், மேல்நீதிமன்ற நியாயாதிக்கம் செல்லாது என்ற வாதத்தையும் கருத்தில் எடுத்ததும் இன்றைய நீதிமன்ற அமர்வில் குறிப்பிடத்தக்கவையாகும்.

தன்னை பதவியிலிருந்து நீக்கியதற்கு எதிராக பா.டெனீஸ்வரன் தொடர்ந்த வழக்கில், மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால நிவாரணத்தில்- பா.டெனீஸ்வரன் சட்டபூர்வ அமைச்சராக தொடர்வதில் எந்த தடைகளும் இல்லை, யாரும் அவரது கடமைக்கு இடையூறு விளைவிக்ககூடாதென குறிப்பிட்டது.

இதன்படி, தன்னை அமைச்ச பதவி வகிக்க முதலமைச்சர் அனுமதிக்கவில்லையென குறிப்பிட்டு டெனீஸ்வரன் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று (18) கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

முதலமைச்சர் தரப்பு சட்டத்தரணி கனகஈஸ்வரனின் வாதத்தில் இன்று அனல் பறந்தது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏன் கையாள முடியாதென்பதை, சட்ட நுணுக்கங்களுடன் விலாவாரியாக எடுத்துரைத்தார். அரசியலமைப்பின்படி நீதிமன்றங்களிற்கு உள்ள அதிகாரங்களையும், முன்னைய வழக்கு உதாரணங்களையும் குறிப்பிட்டார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரிக்க  முடியாதென முதலமைச்சர் தரப்பு ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

இதை கவனத்தில் எடுத்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கின் முடிவை கவனித்து, அதன் பின்னால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வசதியாக ஒக்ரோபர் 16ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர். இம்மாதம் 28ம் திகதி முதலமைச்சரின் உயர்நீதிமன்ற மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு வருகிறது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டால், மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அடுத்த தவணையிலும் ஒத்திவைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வடக்கு அமைச்சரவையிலிருந்து டெனீஸ்வரன் நீக்கப்பட்ட விவகாரம் எடுக்கப்பட்டது.

சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் இரு தரப்பு சட்டத்தரணிகளும் அனல் பறந்த விவாதத்தில் ஈடுபட்டனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரிக்க  முடியாதென முதலமைச்சர் தரப்பு ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

இதை கவனத்தில் எடுத்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கின் முடிவை கவனித்து, அதன் பின்னால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வசதியாக ஒக்ரோபர் 16ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர். இம்மாதம் 28ம் திகதி முதலமைச்சரின் உயர்நீதிமன்ற மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு வருகிறது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டால், மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அடுத்த தவணையிலும் ஒத்திவைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவாதத்தின் பின்னரே, டெனீஸ்வரனின் பதவி நீக்கத்திற்கு எதிராக வழங்கப்பட்ட இடைக்கால தடை நீக்கப்பட்டது. இதன்படி வடக்கு அமைச்சரவையின் சட்டபூர்வ தன்மை குறித்து இதுவரை நிலவி வந்த குழப்பங்கள் தீருமென எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய வழக்கு விசாரணைகள் முடிவடைந்ததும், நீதிமன்ற வளாகத்திற்குள் தனது சட்டத்தரணி கனகஈஸ்வரனின் வாதங்களை வெகுவாக பாராட்டிய முதலமைச்சர், விசேடமாக நன்றி செலுத்தி விட்டு சென்றதை அவதானிக்க முடிந்தது.

முதலமைச்சர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரனும், விவசாய அமைச்சர் க.சிவநேசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் (இன்று சாலிய பீரிஸ் முன்னிலையாகவில்லை), மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் சார்பில் சட்டத்தரணி கணேசராஜா, வடமாகாணசபை உறுப்பினர் டெனீஸ்வரன் சார்பில் சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ, பா.சத்தியலிங்கம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்த வழக்கில் முன்னிலையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad