நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொல்ல முயன்றதாக நான்கு அப்பாவிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உண்மையில் சுமந்திரனை கொல்ல முயன்றவர்கள் அல்ல. அந்த அப்பாவிகளை அடைத்து வைத்துக் கொண்டு சுமந்திரன் தமிழ் மக்களிற்காக சமாதானம் பேசுகிறார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி விசனம் வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதை தெரிவித்தார்.
சுமந்திரனை கொல்ல முயன்றதாக கைதான நால்வரில் இருவர் கைகளை இழந்தவர்கள். ஒருவர் கைதாவதற்கு முன்னர் மூன்று மாதமாக சுயநினைவின்றி இருந்தவர். நான்காவது நபரின் பிள்ளையின் இதயத்தில் ஓட்டை. இப்படி நான்கு அப்பாவிகளை பிடித்து வைத்துக் கொண்டு சுமந்திரன், தன்னை தமிழர்களின் பிரதிநிதி என கூறக்கூடாது என்றார்.
அரசியல்கைதிகள் விவகாரம் தொடர்பிலும் கருத்து தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தை உருவாக்கியதன் நோக்கம் நிறைவேறவில்லை, அதனால் அந்த சட்டத்தை நீக்கி, அதன் கீழ் கைதானவர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment