அம்மாச்சி உணவகம் மைத்திரிக்கு சொந்தமானது - அங்கஜன் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, October 21, 2018

அம்மாச்சி உணவகம் மைத்திரிக்கு சொந்தமானது - அங்கஜன்

அம்­மாச்சி உண­வ­கம் மாகாண அர­சுக்­குச் சொந்­த­மான திட்­ட­மல்ல. அது கொழும்பு அர­சின் திட்­ட­மா­கும். எதிர்­வ­ரும் 23ஆம் திக­திக்­குப் பின்­னர் திரு­நெல்­வே­லி­ யில் உள்ள கொழும்பு அமைச்­சின் ஊடாக ஆரம்­பிக்­கப்­பட்ட உண­வ­கத்­துக்கு அம்­மாச்சி உண­வ­கம் என்ற பெயர் அகற்­றப்­பட்டு வேறு பெயர் சூட்­டப்­ப­டும்.

இவ்­வாறு விவ­சா­யப் பிரதி அமைச்­சர் இ.அங்­க­ஜன் தெரி­வித்­துள்­ளார்.

பிரதி விவ­சாய அமைச்­ச­ரின் யாழ்ப்­பாண இல்­லத்­தில் நேற்று நடத்­தப்­பட்ட செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்­தா­வது-

வடக்கு மாகாண சபை முன்­வைத்த திட்­டங்­க­ளில் அம்­மாச்சி உண­வ­கம் என்ற திட்­டமே உருப்­ப­டி­யான திட்­டம் என்று பல­ரா­லும் கூறப்­ப­டு­கின்­றது. ஆனால் அந்­தத் திட்­டம் மாகாண அர­சின் திட்­ட­மல்ல. கொழும்பு விவ­சாய அமைச்­சின் ஊடாக நாட்­டின் பல பகு­தி­க­ளி­லும் ஆரம்­பிக்­கப்­பட்ட திட்­ட­மா­கும். அதற்­கான நிதி கொழும்பு அர­சின் ஊடா­கவே வழங்­கப்­பட்­டது. ஆனால் இங்­குள்­ள­வர்­கள் அம்­மாச்சி உண­வ­கம் என்று பெயர் வைத்து உரிமை கொண்­டா­டு­கின்­ற­னர்.

யாழ்ப்­பா­ணம் திரு­நெல்­வே­லி­யில் ஆரம்­பிக்­கப்­பட்ட உண­வ­கத்­துக்­குப் பெயர்ப் பலகை வைக்க முற்­பட்­ட­போது மாகாண சபை­யின் இடை­யூ­றால் பெயர் வைக்க முடி­யாது போனது. மாகாண சபை­யின் காலம் எதிர்­வ­ரும் 23ஆம் திகதி முடி­ய­வுள்­ள­தால் அதற்­குப் பின்­னர் நாம் கொழும்பு அர­சால் முன்­மொ­ழி­யப்­பட்ட கொல பொஜன என்ற பெய­ருக்கு ஏற்ற தமி­ழாக்­கத்தை அல்­லது வேறு பெய­ரைச் சூட்­ட­வுள்­ளோம்.

வடக்­கில் இரா­ணு­வத்­தி­னர் மேற்­கொள்­ளும் விவ­சாய உற்­பத்­திப் பொருள்­கள் பொதுச் சந்­தை­க­ளில் விற்­ப­னைக்­குக் கொண்டு வரப்­ப­டு­வதை ஆதா­ரத்­து­டன் தெரி­யப்­ப­டுத்­தி­னால் அதைத் தடுத்து நிறுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும். இரா­ணு­வத்­தி­னர் விவ­சாய உற்­பத்­திப் பொருள்­க­ளைக் கொண்டு வந்து சிவில் உடை­யில் இருந்­த­வாறு விற்­பனை செய்­கின்­ற­னர் என்று கூறப்­ப­டு­கின்­றது. அதை­யும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

வடக்­கில் உற்­பத்தி செய்­யப்­ப­டும் மாம்­ப­ழங்­க­ளின் தரத்தை விருத்தி செய்­வ­தற்­கும், உற்­பத்­தித் திறனை அதி­க­ரிப்­ப­தற்­கும் விவ­சா­யி­க­ளுக்கு உரிய சந்தை வாய்ப்­புக்­களை வழங்­கு­வ­தற்­கும் விவ­சாய அமைச்சு உரிய நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. விவ­சா­யி­க­ளி­டம் இருந்து நியாய விலை­யில் மாம்­ப­ழங்­கள் கொள்­வ­னவு செய்­யப்­பட்டு இயற்கை முறை­யில் அவை பழுக்க வைக்­கப்­ப­டும். இயற்­கை­யா­க­கப் பழுக்க வைக்­கப்­ப­டும் மாம்­ப­ழங்­கள் மீது ஸ்ரிக்­கர் பொறிக்­கப்­ப­டும்.

அதைக் கொண்டு மக்­கள் தயக்­க­மின்றி சுகா­தா­ர­மான பழங்­க­ளைக் கொள்­வ­னவு செய்ய முடி­யம். எதிர்­வ­ரும் காலங்­க­ளில் பப்­பா­சிப்­ப­ழம், வாழைப்­ப­ழம் போன்­ற­வற்­றுக்­கும் இப்­ப­டி­யான திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டும்.- என்­றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad