விக்னேஸ்வரன் ஐயாவின் அறிவிப்பை வரவேற்கின்றோம்! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, October 1, 2018

விக்னேஸ்வரன் ஐயாவின் அறிவிப்பை வரவேற்கின்றோம்!


முதல்வர் விக்கினேஸ்வரனின் தனிக்கட்சி தொடர்பான அறிக்கைக்கு பதிலளிக்கும்போதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி மேற்படி கருத்தை தெரிவித்துள்ளது.

இதுபற்றி மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஐயா உருவாக்கும் கட்சிக்குள் தமிழ் மக்கள் பேரவையில் உள்ள சிவில் அமைப்பு பிரதிநிதிகளையும் அதற்கு வெளியே தன்னைப்போன்று நேர்மையான நிலைப்பாட்டில் உள்ள சிவில் அமைப்புக்களையும் இணைத்து கட்சியை உருவாக்குவது மிகவும் ஆரோக்கியமானதாக அமையும். 

அவ்வாறான கட்சியுடன் எமது கட்சி கூட்டிணைந்து பொது முன்னணி ஒன்றினை உருவாக்கி பொதுச் சின்னம் ஒன்றின் கீழ் ஐயாவின் தலைமையில் செயற்படுவதற்கு நாம் தயாராக உள்ளோம். இவ்வாறான நிலை உருவானால் தமிழ் மக்களுக்கு நம்பிக்கைதரும் கூட்டாக இக்கூட்டு அமையும். 

அது 2004 தேர்தல் காலம் போன்று மிகப்பெரும் எழுச்சியை மக்கள் மத்தியில் உருவாக்கும். 

 ஐயாவின் தலைமையில் மக்களுக்காக பேரம்பேசும் நேர்மையான அரசியல் தலைமையாக  இந்தக் கூட்டு விளங்கும்.

இக்கூட்டுக்குள் ஒற்றையாட்சியை ஆதரித்து முன்மொழிவை சமர்ப்பித்தவர்களும் அம்முயற்சிக்கு துணையாயிருந்தவர்களும், இராஜபக்சேவோடு கூட்டாட்சி அமைக்க முயன்றவர்களும் நுழைய ஐயா இடமளிக்க கூடாது.

என அக்கட்சி சார்பில் செல்வராஜா கஜேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Bottom Ad