வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் வல்வெட்டித்துறை நகரசபை அமைக்க உத்தேசித்துள்ள பொது நினைவுத்தூபியை அமைப்பதற்கு தடையில்லையென பருத்தித்துறை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நினைவுத்தூபி கட்டுமானத்திற்கு பொலிசார் தடைவிதிக்குமாறு கோரியிருந்த வழக்கை, நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
இந்திய, இலங்கை கூட்டுச்சதியால் புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட பன்னிரண்டு வேங்கைகள் 1987 இல் உயிர்நீத்திருந்தனர். அவர்களின் நினைவாக தீருவிலில் விடுதலைப்புலிகள் நினைவுத்தூபியொன்றை அமைத்திருந்தனர்.
1996இல் யாழ்ப்பாணத்தை படையினர் கைப்பற்றியதும் அந்த தூபியை அடித்தனர்.
அந்த இடத்தில் அனைத்து இயக்கங்களில் இருந்தும் உயிர்நீத்தவர்களிற்காக பொது நினைவுத்தூபியொன்றை அமைக்க, வல்வெட்டித்துறை நகரசபை முடிவெடுத்தது. இதற்கு உள்ளூரில் எதிர்ப்பு கிளம்பியது.
கடந்த 05ம் திகதி அடிக்கல் நாட்டும் நிகழ்வை செய்ய முனைந்தபோது, பெரும் களேபரமானது. அது பொது நினைவுத்தூபியல்ல, பன்னிரண்டு வேங்கைகளின் நினைவுத்தூபியே என சிவாஜிலிங்கம் விளக்கமளித்த போதும், எதிர்ப்பாளர்கள் அதை ஏற்கவில்லை. ஏனெனில், வல்லெட்டித்துறை நகரசபையில் பொது நினைவுத்தூபியென்றே தீர்மானம் நினைவேற்றப்பட்டது.
அந்த தூபியை அமைக்க தடைவிதிக்குமாறு பொலிசார், பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த 5ம் திகதி இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டே போது, வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் சார்பில் சட்டத்தரணி என்.சிறீகாந்தா முன்னிலையகியிருந்தார். நகரசபை இலங்கை சட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்டது, அந்த நகரசபையினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் சட்டரீதியானவை, தூபி அமைக்கும் முடிவு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. அது சட்டவிரோத பணத்தில் கட்டப்பட்டதல்ல என்ற வாதங்களை முன்வைத்தார்.
இந்த வழக்கு நேற்று தவணையிடப்பட்டிருந்தது.
நேற்று நகரசபை தலைவர் சார்பில் சட்டத்தரணி சுஜீவன் முன்னிலையானார்.
தண்டனை சட்டக்கோவை 120 இன் கீழ் நகரசபையின் செயற்பாட்டிற்கு தடைவிதிக்க முடியாதென நீதிவான நளினி சுதாகர் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment