ரணிலுக்கு வேலை பார்த்த சிறிதரன்!! அதிர்ச்சி ஆதாரம்!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, October 14, 2018

ரணிலுக்கு வேலை பார்த்த சிறிதரன்!! அதிர்ச்சி ஆதாரம்!!

கிளிநொச்சியை மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் சகிதம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மத்திய அரசிற்கு தாரை வார்த்துவருகின்றமை அம்பலத்திற்கு வந்துள்ளது.

ஏற்கனவே விடுதலைப்புலிகளது முன்னாள் உறுப்பினர்களின் காணிகளை சுருட்டிக்கொண்ட விவகாரம் சிறீதரனிற்கு எதிராக சூடுபிடித்துள்ள நிலையில் தற்போது வடமாகாணசபை காணிகளை அடாத்தாக பிடித்து மத்திய அரசிற்கு தாரைவார்த்துவருகின்றமை அம்பலத்திற்கு வந்துள்ளது.

வடமாகாணசபைக்கு சொந்தமான கிளிநொச்சி நகரப்பகுதியிலுள்ள காணியொன்றில் வடமாகாண காணி திணைக்களத்தை நிறுவ முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் முற்பட்டுள்ளார். இதற்கேதுவாக குறித்த காணியில் கட்டட நிர்மாணத்திற்கென இடமொதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பெயர்பலகை பொருத்தப்பட்டிருந்தது.

எனினும் பொருத்தப்பட்ட அன்றிரவே அவை சிறீதரன் தரப்பால் பிடுங்கி எறியப்பட்டுவிட்டது.அத்துடன் அக்காணியில் மத்திய அரசின் உரக்கூட்டுதாபனத்திற்கு சிறீதரனின் பணிப்பின் பேரில் மாவட்ட செயலாளரால் இடம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக கிளிநொச்சி நகரில் உரக்கூட்டுதாபனத்திற்கான களஞ்சியத்தை நிறுவ சிறீதரன் வடமாகாணசபை காணிகளை பகிர்ந்தளிக்க உத்தரவிட்டிருந்தார். எனினும் சுற்றுசூழலை பாதிக்குமென தெரிவித்து முதலமைச்சர் அதனை நிராகரித்திருந்தார்.பொருத்தமான காணியை நகரிற்கு வெளியே வழங்கவும் ஆலோசனை வழங்கியிருந்தார்.

வடமாகாணசபையின் திட்டங்கள் தனக்கு விளம்பரங்களை பெற்றுத்தராதென்பதால் முதலமைச்சரின் முயற்சிகளை தடுப்பதையே தற்போது சிறீதரன் மும்முரமாக கொண்டுள்ளார்.அவ்வகையில் தற்போது காணி திணைக்களத்திற்கென கட்டடமொன்றை நிறுவ முதலமைச்சர் முற்பட்டுள்ளார்.அதன் மூலம் வன்னியில் முன்னெடுக்கப்படும் நிலசுவீகரிப்புக்களை கண்காணிக்கமுடியுமென முதலமைச்சர் நம்புகின்றார்.
இந்நிலையில் அதனை தடுத்து நிறுத்த முழு அளவில் தற்போது மாவட்ட செயலாளர் சகிதம் சிறீதரன் முற்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. 

தற்போது வடமாகாண காணி திணைக்களம் யாழ்.நகரில் தனியார் கட்டடத்திலேயே இயங்கியே வருகின்றது.

அதற்கான நிரந்தர கட்டடமொன்றை அமைக்க மேற்கொள்ள ஏதுவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் விட்ட நிலையில் மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் மூலம் தற்போது உச்சகட்ட தலையிடிகளை வழங்கிவருதாக தற்போது அம்பலமாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad