யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதான குழுவை சேர்ந்த 7 தலைவர்கள் உட்பட 58 பேர் கடந்த 4 மாதங்களில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி வருண ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 27 சம்பவங்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவர்களில் அதிகமானோர் யாழ் மானிப்பாய் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆவா குழு, தனுரொக் குழு, அஜித் குழு உட்பட பல குழுக்கள் யாழில் செயற்படுகின்ற போதிலும், அதில் இரண்டு குழுக்கள் மாத்திரமே பிரபல்யம் அடைந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த குழுக்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்தில் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Aava gangs
No comments:
Post a Comment