நரைத்த மயிரும் நாலுமுழ வேட்டியும்
வாயில் வளமான பேச்சும்
நாலு வரியில் நாம் எடுத்த பட்டங்களும் - அடுக்கிப்
போட்டால்தான் கேட்பார்கள் எம் கதையை
இல்லாவிட்டால்
இவங்கள் சின்னபெடியன்கள்
அவசரப்பட்டு ஆக்ரோசமா நிக்கிறாங்கள்
ஆடிக்கறக்க வேணும் எண்டா
பாடிக்கறக்கவும் றெடியாத்தான் போகவேணும்
சொன்னால் புரியாது சின்னப்பெடியங்கள்
இப்பிடி சொல்லுகின்ற எங்கள் சனம் மத்தியில
உங்களைப் போலொருவர் எழும்பி நிண்டு சொன்னாத்தான்
கேக்குங்கள் எங்கள் சனம் - இல்லாட்டா
நாலுவித கேள்விகள் நச்சரிச்சு நிக்குங்கள்
என்ன சொல்லுறியள்?
உங்களுக்கும் பேச்சோ கலைச்சுவிட போயினமோ?
கொழும்பு ஏசியில கூலா இருந்திட்டா
குசும்புகளை காட்டலாம் எண்டு கனவுகண்டா
நீங்கள் என்ன சனத்தின்ர கதை கேக்கபோறியளோ?
கோபப்பட்டு நிக்கினமோ?
ஐயா விக்கிஐயா அரசியலை பாக்காம
அடிப்படை விசயத்தை பாத்த நீங்கள்
சனத்தின்ர பக்கம் நிண்டு கதைக்கிறீங்கள்
ஆண்டாண்டு காலமாய் அரசியல்ல இருந்தவையள்
இருக்கவெண்டு நினைக்கிறவை
இருக்கிற பிரச்சனையை தீரவிடுவினமோ?
ஐம்பது வீதம் கொடுக்கட்டாம் பெண்களுக்கு
இங்கிலீசு பேப்பரில சட்டத்தரணி சொல்லுகிறார்
ஆனந்தி அக்காக்கு இடம் இல்லை ஆனா
அம்பது வீதம் அனல்பறக்க சொல்லுகிறார்
தமிழினி அக்காவின் இறுதி வணக்கத்தில்
எங்கள் ஐயா போனவரோ
போயிருந்தால் கூட ஒரு பாவம் குறைந்திருக்கும்!
அதைவிடுங்கோ விக்கி ஐயா
சொல்லவந்த விசயத்தை மறந்துபோனன்
உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா
நெஞ்சுநிமிர்த்தி தமிழனாய் கதைப்பதற்கும்
தலையை குனிந்து எங்கள் குறை கேட்பதற்கும்
எழுபத்தாறு அகவை வாழ்த்துகள் ஐயா
பதிவர் - கீதன் இளையதம்பி
குறிப்பு : 2015 இல் எழுதியது
No comments:
Post a Comment