ச.பவன்: அமைச்சருக்கு யாழில் மதுபான விருந்து!! கைதிகள் சிறையில்!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, October 7, 2018

ச.பவன்: அமைச்சருக்கு யாழில் மதுபான விருந்து!! கைதிகள் சிறையில்!!

நுங்கு கொடுப்பது வேறு! மது கொடுப்பது வேறு!!

அண்மையில் சிங்கள அமைச்சர் ஒருவரை தனது வீட்டுக்கு அழைத்து மதுபான விருந்து ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் ச.பவன் கொடுத்தமை தவறு என தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒருதடவை பிரதமரை எனது வீட்டுக்கு அழைத்து நுங்கு கொடுத்தமை ஒரு விருந்துபசாரம் ஆகும். ஆனால் மதுபானங்கள் கொடுத்து விருந்து வைத்தமை எனக்கு சங்கடமாக இருந்தது என சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் கூட்டம் ஒன்றில் குறித்த விடயம் விவாதத்திற்கு வந்தபோதே இதனை சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சி மதுபாவனைக்கு எதிரான கட்சி ஆகும். எனவே இது சரியல்ல. இனிமேல் இப்படி செய்யவேண்டாம் என மாவை சேனாதிராசாவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால் இவ்விடயத்தை வெளிக்கொண்டுவந்தவரை சிஐடியிடம் முறையிட்டு கடும் நடவடிக்கை தன்னால் எடுக்கமுடிம் என ச.பவன் மீளவும் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad