ரணில்தான் இலங்கையின் பிரதமர்! அதிரடி அறிவிப்பு!! பெரும் குழப்பம்.. - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, October 28, 2018

ரணில்தான் இலங்கையின் பிரதமர்! அதிரடி அறிவிப்பு!! பெரும் குழப்பம்..

ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் பிரதமராக நீடிப்பார் என்று அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார்.

ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் அங்கு யார் பிரதமர் என்ற குழப்பம் உருவாகி உள்ளது.

நீடிக்க உள்ளார் இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நீடிப்பார் என்று அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ராஜபக்சே பதவி ஏற்பை ஏற்றுக் கொள்ள முடியாது சபாநாயகர் அதிரடியாக

நிரூபணம் செய்ய வேண்டும் மேலும் ராஜபக்சே உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும். அவருக்கு எத்தனை எம்பிக்கள் பலம் உள்ளது என்று நிரூபிக்க வேண்டும். ராஜபக்சே தன்னுடைய பலத்தை நிரூபித்தால் மட்டுமே அவரது பதவி ஏற்பை ஏற்றுக்கொள்ள முடியும் என்றுள்ளார்.

யார் நேற்று ராஜபக்சேவிற்கு பிரதமருக்கான அதிகாரம் அனைத்தும் வழங்கப்படுகிறது என்று அதிபர் சிறிசேனா கூறினார்.

இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிற்குத்தான் அனைத்து அதிகாரமும் இருக்கிறது என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

முடிவெடுக்கும் அதிகாரம், உரிமை அவருக்குத்தான் உள்ளது என்று சபாநாயகர் பரபரப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பெரிய குழப்பம் ஏற்கனவே ராஜபக்சே இலங்கையின் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இந்த நிலையில் சபாநாயகரின் புதிய அறிவிப்பால் மேலும் குழப்பம் நீடிக்கிறது. இலங்கையின் பிரதமர் யார் என்று பெரிய குழப்பம் நீடிக்கிறது.


No comments:

Post a Comment

Post Bottom Ad