பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியாக இருந்தமைக்கான காரணம் ...... - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, October 16, 2018

பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியாக இருந்தமைக்கான காரணம் ......

பல்கலைக்கழக மாணவர்கள் சிங்கள இளைஞர்களோடு திருப்பி கதைத்திருந்தால் என்ன நடைபெற்றிருக்கும்......

1. தமிழின விரோதிகள் எங்களை பல்கலைக்கழக காடையர்கள் என்று முத்திரை குத்த சிங்கள இனவதிகள் யாழ் பல்கலைக்கழக பயங்கரவாதிகள் என முத்திரை குத்தியிருப்பார்.
2.பல்கலைக்கழக மாணவர்களை பலவீனப்படுத்தி சமூகத்தின் மத்தியில் பல்கலைக்கழக மாணவர்களின் நன்மதிப்பை குறைக்கும் எண்ணம் வெற்றி கண்டிருக்கும்.
3.சிங்கள இளைஞர்கள் போல் நாமும் செயற்பட்டிருந்தால் குழப்பத்தை உண்டுபண்ண வேண்டும் என்றே வந்த அவர்களின் எண்ணம் நிறைவேறி சிறைச்சாலை ஒரு கலவர பூமியாக மாறியிருக்கும்.
4.அந்த ஐந்து பேருக்காகவும் அநுராதபுரமே திரண்டிருக்கும்.
பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியாக இருந்தமைக்கான காரணம்......
1-அங்கே வந்த சிங்களவர்கள் தங்களை பெரியவர்களாக காட்டிகொண்டு குழப்பத்தை ஏற்படுத்தவே வேறு எக்காரணமும் அல்ல அவர்களுக்கு எல்லாமே தெரிந்துதான் வந்தார்கள் என்பதனை நாம் அறிந்திருந்தோம்
2-நாங்கள் நடைபயணம் மேற்கொண்டது சிங்களவர்களுடன் சண்டைபிடிக்கவல்ல உண்ணாமல் இருக்கும் கைதிகளுக்காக அவர்களின் விடுதலையை வலியுறுத்த அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுக்க
2- மாணவர்களாக நடந்து வந்த நாம் போராட்டம் முடிந்து போகும் போது எங்கள் அனைவருடைய பாதுகாப்பு மற்றும் எங்களை நம்பி வந்த பெண் மாணவிகளின் பாதுகப்பு மற்றும் அவர்களின் பெற்றோருக்கான பொறுப்புக்கூறல்
3- மற்றும் எமது பல்கலைக்கழகத்தின் நற்பெயரை பாதுகாத்தல்
இவற்றின் காரணமாக எமது பல்கலைக்கழக மாணவர்கள் புத்திசதுரியமாக நடந்து கொண்டனரே தவிர நாங்கள் கோழைகள் என்பதல்ல அஹிம்சை வழியில் நீதி கோரி புறப்பட்டுச் சென்ற நிராயுதபாணிகள் நாங்கள் என்பதே சண்டை பிடிக்கவோ அல்லது தர்க்கம் புரியவோ தெரியாதவர்கள் அல்ல யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்.

 பதிவர் - கிருஷ்ண மீனன்

No comments:

Post a Comment

Post Bottom Ad