புதிய பிரதமரை ஒரே வார்த்தையில் வாயடைக்கவைத்தார் சம்பந்தன்
புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தiலைவர் இராசம்பந்தனுக்|கும் இடையில் சற்றுமுன்னர் மிக முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பு மஹிந்த ராஜபக்ஷவின் விஜயராம இல்லத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போது புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முழுமையான ஆதரவை சம்பந்தனிடம் வேண்டினார். அத்துடன் நாட்டின் அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் விரிவாகப் பேசினார். மஹிந்த ராஜபக்ஷ , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பூரண ஆதரவு தனக்கு வேண்டும் என்றார். உங்களது பூரண ஆதரவாலேயே தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிலைநாட்டமுடியும் என்றும் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த தமிழ்த் தேசியக் |கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் கோரிக்கைகள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுப்பேன் என்று நீங்கள் எழுத்துமூல உறுதியை எமக்கு வழங்கினால் மட்டுமே நான் எமது சக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு கலந்துரையாடி உங்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாகப் பரிசீலிக்கலாம் என்று குறிப்பிட்டுவிட்டு வெளியேறி வந்தார்.
இந்தச் சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கலந்துகொண்டார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment