03 - 10 - 2018 அனுராதபுரம் சிறைச்சாலை
மாலை 3:30 மணி உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளை சந்திப்பதற்காக காத்திருக்கிறோம்.
பெயர்கள் கூப்பிடப்படுகிறது குறிப்பிட்ட நேரத்தில் நிறைய விடயங்கள் கதைக்கின்றோம் உணவை ஏற்கமறுத்து சாவா வாழ்வா போராட்டம் செய்யும் அவர்களிடம் அத்தனை தெளிவு நிதானம்.
உறுதிப்பாடு தம்மையும் ஏமாற்றும் நயவஞ்சகர்கள் மீது கடுஞ்சினம் எந்த மக்களுக்காக உழைத்தார்களோ அந்த மக்களை அணிதிரண்டு போராட அழைப்பு குறுகிய நேர அவகாசம் ஒருவர் மாறி ஒருவர் கதைக்கிறார்கள் கனவுகளோடு.
''அண்ணை சுமந்திரன்ல எங்களுக்கு நம்பிக்கை இல்லை எங்கள சுமந்திரன் சந்திக்கேக்க நாங்கள் சொன்ன விடயம் எந்த வித பாகுபாடுமின்றி அனைத்து அரசியல் கைதிகளையும் குறுகிய புனர்வாழ்வின் அடிப்படையில விடுதலை செய்யச்சொல்லி சட்டமாஅதிபரோட கதைக்கச்சொல்லி ஆனால் அவர் ஊடகங்களுக்கு கருத்துச்சொல்லி இருக்கிறார் எல்லாரையும் விடுவிப்பது சாத்தியப்படாது பாரியகுற்றமிழைத்தவர்கள் இப்போது விடுவிப்பது கஸ்ரம் எண்டு குற்றச்சாட்டுக்களின் வழக்குகள் என்னும் தீர்பளிக்கப்படாமல் பாரிய குற்றச்சாட்டென்று தீர்மானிப்பதற்கு சுமந்திரன் யார் முதலமைச்சரை பீயோன் வேலை செய்யுறார் என்டு விமர்சித்த சுமந்திரனிக்கு ஒழுங்காக பீயோன் வேலை கூட செய்யத்தெரியலை தெளிவாக சொல்லுங்கோ அண்ண இவங்கட ஏமாற்ற வித்தையை நம்பி நாங்கள் உண்ணாவிரத்த்தை கைவிடப்போறேல்ல எண்டு''
அடுத்த அரசியல் கைதி தொடர்கிறார் '' அண்ணை பல்கலைக்கழக்க்கார்ரிட்ட சொல்லுங்கோ எங்கட போராட்டம் சம்பந்தமா எந்தவொரு நடவடிக்கையிம் எடுக்காமல் அவையல் அமைதியா இருக்கிறது மனசுக்கு செரியான கவலையா இருக்கென்டு நாங்கள் அவைய தான் மலையா நம்பி இருக்கிறோம்".
அடுத்த அரசியல் கைதி " அண்ண ஒரு ஜல்லிக்கட்டுப்போராட்டம்ம் மாதிரி ஒரு பாரிய எதிர்ப்பை பொது அமைப்புக்கள் அனைத்து மக்களையும் ஒன்றுதிரட்டி பெரியளவில செய்யுங்கோ அரசியல் கைதிகளின் விடுதலையை முகநூலிலையும்சகல ஊடகங்களிலுயும் திருப்பி திருப்பி எழுதுங்கோ எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கண்ண ".
ரைம் இவறாய் யன்ட யன்ட
"அண்ணா சகல சிறைச்சாலைகளலும் 42ற்கு மேற்பட்ட கைதிகள் உண்ணாவிரதம் இருக்கிறம் இந்த விசயங்கள் வெளிய வருகிதில்ல நாங்கள் செத்தாலும் பரவாயில்ல தீர்வு இல்லாமல் இந்த உண்ணாவிரத்த்தை கைவிடப்போறதில்ல எல்லாரிட்டையும் சொல்லுங்கண்ண".
கனத்த இதயத்தோடு நடக்கின்றோம் கண்களில் கண்ணீரைத்துடைத்தபடி நாங்கள் அனைவரும் என்ன பதில் சொல்லப்போகின்றோம் அவர்களுக்கு.

No comments:
Post a Comment