ஜனா­தி­பதி தனக்குத் தானே வெட்­டிய குழி - சத்­ரியன் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, October 8, 2018

ஜனா­தி­பதி தனக்குத் தானே வெட்­டிய குழி - சத்­ரியன்

அவ்­வப்­போது, பர­ப­ரப்­பான தக­வல்­களை வெளி­யிட்டு ஊட­கங்­க­ளையும், அர­சி­ய­லையும் பர­ப­ரப்­பாக்­கு­ப­வர்­களில் ஒரு­வ­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் மாறி­யி­ருக்­கிறார்.
2015ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வந்த பின்னர், அவ்­வப்­போது அவர் முன்­னைய பல இர­க­சி­யங்­களை அவிழ்த்து விட்­டி­ருந்தார்.
தாம் சுகா­தார அமைச்­ச­ராக இருந்­த­போது, மருந்து நிறு­வ­னங்கள், இலஞ்சம் வழங்க முற்­பட்­டமை, புகைப்­பொருள் விற்­பனை நிறு­வ­னங்கள் தம்மை நீக்­கு­வ­தற்கு அழுத்­தங்­களைக் கொடுத்­தமை பற்றி அவர் முன்னர் கூறி­யி­ருக்­கிறார்.
ஜனா­தி­பதித் தேர்­தலில் தோல்­வி­யுற்­றி­ருந்தால், தான் கொன்று புதைக்­கப்­பட்­டி­ருப்பேன் என்றும், ஜனா­தி­பதித் தேர்தல் நடந்த அன்­றி­ரவு நண்பரக ஒரு­வரின் தென்­னந்­தோட்­டத்­துக்குள் மறைந்­தி­ருந்­தமை பற்­றியும் அவர் பேசி­யி­ருந்தார்.
அது­போ­லவே, வடக்கு மாகாண சபைக்கு வழங்­கப்­பட்ட 60 சதவீத­மான நிதி திருப்பி அனுப்­பப்­பட்­டது என்றும் ஒரு தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் கூறி­யி­ருந்தார்.
நாய் கூடச் சாப்­பிட முடி­யாத முந்­திரிப் பருப்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமா­னத்தில் தனக்கு பரி­மா­றப்­பட்­டது என்றும் கூட அவர் பேசி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தினார்.
இப்­போது அவர் கூறிப் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் விடயம், போரின் இறுதிக் கட்டம் பற்­றி­யது.
“போரின் இரண்டு வாரங்­களில் விடு­தலைப் புலிகள் கொழும்பைத் தாக்கி அழி­வு­களை ஏற்­ப­டுத்தத் திட்­ட­மிட்­டி­ருந்­தனர். எல்லா உயர் மட்ட அர­சியல், இரா­ணுவத் தலை­வர்­களும் ஓடி ஒளிந்து கொண்­டார்கள். நான் தான் பதில் பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்தேன். நானும் கூட ஒரே இடத்தில் இருக்­காமல் மாறி மாறி ஒளிந்து திரிந்தேன்” என்று அவர் நியூ­யோர்க்கில் வெளி­யிட்­டி­ருக்கும் தகவல் கடு­மை­யான எதிர்­வி­னை­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.
போர்க்­கால இர­க­சியம் என்ற பெயரில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெளி­யிட்­டி­ருக்­கின்ற இந்த தக­வல்கள், பெரும் விமர்­ச­னங்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருக்­கி­ன்றன சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் இதனை மறுத்தும் உள்­ளனர்.
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இர­க­சி­யங்­களை அல்­லது உண்­மையை வெளி­யி­டு­வது என்ற பெயரில் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில், அதிகம் பேசி மாட்டிக் கொள்­கிறார் என்ற கருத்து, பொது­வா­கவே அர­சியல், ஊடக மட்­டங்­களில் காணப்­ப­டு­கி­றது.
வடக்கு மாகாண சபைக்கு வழங்­கப்­பட்ட 60 சதவீத நிதி திருப்பி அனுப்­பப்­பட்­டது என்ற அவ­ரது கருத்தும் அவ்­வா­றான ஒன்று தான்.
அண்­மையில் முந்­தி­ரிப்­ப­ருப்பு விவ­கா­ரத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பொதுக்­கூட்­டத்தில் பேசியமை பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­திய போதிலும், அதற்கு எதி­ராக அவர் ஏன் நட­வ­டிக்கை எடுக்­காமல் இருந்தார் என்ற கேள்­வியும் இன்னும் பல­மாக எதி­ரொ­லித்­தது.
ஒரு நாட்டின் ஜனா­தி­ப­திக்கு, அர­சுக்கு சொந்­த­மான விமா­னத்தில் தர­மற்ற உணவுப் பொருட்கள் பரி­மா­றப்­பட்ட போது, அவர் தனக்­கி­ருக்கும் அதி­கா­ரத்தைக் கொண்டு, விசா­ர­ணைக்கு உத்­த­ர­விட்­டி­ருக்க வேண்டும். குறை­பா­டு­களை களை­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்க வேண்டும்.
அதனை விட்டு விட்டு, பொதுக்­கூட்­டத்தில் போய், நாய் கூட சாப்­பிட முடி­யாத முந்­திரிப் பருப்பைத் தந்­தார்கள் என்று அவர் கூறி­யது, கடு­மை­யான விமர்­ச­னங்­க­ளுக்கு கார­ண­மா­னது.
அது சுவா­ரஸ்­ய­மான செய்­தி­யாக இருந்­தாலும், பொரு­ளா­தார முடையில் சிக்­கி­யுள்ள ஒரு நாட்டின் பொறுப்­பு­வாய்ந்த ஜனா­தி­பதி, சுற்­றுலாத் துறையைப் பாதிக்கக் கூடிய இத்­த­கைய கருத்தைப் பகி­ரங்­க­மாக வெளி­யிட்­டது சரியா என்ற கேள்­வியில் அதிக நியாயம் உள்­ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவை ஏற்­க­னவே நட்­டத்தில் இயங்­கு­கின்ற நிலையில், ஜனா­தி­ப­தியின் இந்தக் கருத்து, அதன் மதிப்பை கெடுப்­ப­தா­கவே இருந்­தது.
ஒரு உத்­த­ரவின் மூலம் ஜனா­தி­பதி குறை­பாட்டை நிவர்த்தி செய்­தி­ருக்க முடியும். அதனைச் செய்­யாமல் பொது­வெ­ளிக்கு அந்தப் பிரச்­சி­னையைக் கொண்டு வந்­ததன் மூலம், அந்தப் பிரச்­சினை தீர்க்­கப்­பட்­டி­ருந்­தாலும், நாட்டின் தேசிய விமான சேவைக்கு ஏற்­பட்ட கறை நீங்கப் போவ­தில்லை.
இது­போன்று பல­வே­ளை­களில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னுக்குப் பின் முர­ணா­கவும், வாய்க்கு வந்த படியும் பேசிக் கொள்­வது அர­சி­யலில் கூட அவ­ருக்கு பல சம­யங்­களில் சிக்­கலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.
அண்­மையில் ஐ.நா. பொதுச்­சபைக் கூட்­டத்தில் பங்­கேற்க, நியூயோர்க் சென்­றி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அங்­குள்ள இலங்­கை­யர்கள் மத்­தியில் வெளி­யிட்­டி­ருந்த கருத்­து­களும், அவ்­வாறே பலத்த விமர்­ச­னங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­ன்றன.
போரின் இறுதி இரண்டு வாரங்­களில் நடந்த சில சம்­ப­வங்­களைப் பற்றி ஜனா­தி­பதி பேசி­யி­ருந்தார்.
“போரின் இறுதி இரண்டு வாரங்­களில், புலிகள் சென்­னையில் இருந்து அல்­லது காட்­டுக்குள் இருந்து, விமானம் மூலம் கொழும்பில் தொடர் தாக்­கு­தல்­களை நடத்த திட்­ட­மிட்­டி­ருந்­தனர்.
அதற்குப் பயந்து, ஜனா­தி­ப­தி­யாக இருந்த மஹிந்த ராஜபக் ஷ, பிர­த­ம­ராக இருந்த ரட்­ண­சிறி விக்­ர­ம­நா­யக்க, பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்த கோத்­தா­பய ராஜபக் ஷ, இரா­ணுவத் தள­ப­தி­யாக இருந்த சரத் பொன்­சேகா எல்­லோ­ருமே, வெளி­நா­டு­க­ளுக்குச் சென்று விட்­டனர்.
பதில் பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்த நான் தான் போரை வழி நடத்­தினேன்” என்று கூறி­ருந்தார் ஜனா­தி­பதி. மேற்­கூ­றிய அனை­வரும் இறுதிப் போரின் போது நாட்டில் இருக்­க­வில்லை, இறுதிப் போரில் என்ன நடந்­தது என்று இவர்­களை விட எனக்குத் தான் அதி­க­மாகத் தெரியும், படை­யி­னரைக் காப்­பாற்­று­வதில் இவர்­களை விட எனக்கு கூடிய அக்­கறை உள்­ளது- என்று காண்­பிக்க முற்­பட்ட ஜனா­தி­பதி தேவை­யின்றி, சில விட­யங்­களை வெளி­யிட்டு மாட்டிக் கொண்­டி­ருக்­கிறார்.
போரின் இறு­திக்­கட்­டத்தில் மஹிந்த ராஜபக் ஷ நாட்டில் இருக்­க­வில்லை என்­பது உண்மை தான். அவர் அப்­போது ஜோர்­தா­னுக்குச் சென்­றி­ருந்தார்.
அது­போ­லவே, இரா­ணுவத் தள­பதி சரத் பொன்­சே­காவும் சீனா­வுக்குச் சென்­றி­ருந்தார்.
ஆனால் ஜனா­தி­பதி கூறி­யி­ருந்­தது போல, பாது­காப்புச் செய­ல­ராக இருந்த கோத்­தா­பய ராஜபக் ஷ, வெளி­நாட்டுப் பயணம் எதையும் அப்­போது மேற்­கொண்­டி­ருக்­க­வில்லை. அவர் கொழும்பில் தான் தங்­கி­யி­ருந்தார்.
ஜனா­தி­ப­தியின் கருத்து வெளி­யா­கிய பின்னர், பிபிசி சிங்­கள சேவைக்கு வழங்­கிய செவ்­வி­யிலும், கோத்­தா­பய ராஜ­பக்ச அதனைக் கூறி­யி­ருக்­கிறார்.
அவர் மாத்­தி­ர­மன்றி, பிர­த­ம­ராக இருந்த ரட்­ண­சிறி விக்­ர­ம­நா­யக்­கவும் கூட, போரின் இறுதி நாட்­களில் இலங்­கையில் தான் தங்­கி­யி­ருந்தார். வேறெங்கும் செல்­ல­வில்லை.
போர்க் கால­கட்­டத்தில் இப்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன புலி­களால் பல­முறை இலக்கு வைக்­கப்­பட்டார் என்­பது உண்மை. அவர் தனது உயி­ருக்குப் பயந்து போரின் இறுதி நாட்­களில் பல்­வேறு இடங்­களில் மறைந்­தி­ருக்கக் கூடும். ஆனாலும், எல்­லோரும் ஓடி விட்­டார்கள் என்று அவர் வெளி­யிட்ட தக­வல்கள் மிகை­யா­னவை.
அது­போ­லவே, சென்­னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பைத் தாக்க விடு­தலைப் புலிகள் திட்­ட­மிட்­டி­ருந்­தனர் என்று ஜனா­தி­பதி கூறி­யி­ருந்த தக­வலும் கூட, இந்­தி­யாவின் பாது­காப்பு ஆய்­வா­ளர்­களின் கடு­மை­யான விமர்­ச­னங்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருக்­கி­றது.
அப்­படி ஒரு தாக்­குதல் திட்டம் பற்றி தாம் அறி­ய­வில்லை என்று கோத்­தா­பய ராஜபக் ஷ கூறி­யி­ருக்­கிறார். சரத் பொன்­சே­காவும் அதனைத் தான் சொல்­லி­யி­ருக்­கிறார்.
சென்­னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பைத் தாக்­கு­வது ஒன்றும் இல­கு­வான காரி­ய­மில்லை.
ஒரு­வேளை சில விமா­னங்­களைக் கடத்தி தாக்­குதல் நடத்தப் புலிகள் திட்­ட­மி­டலாம் என்ற எச்­ச­ரிக்­கைகள் விடுக்­கப்­பட்­டி­ருக்­கலாம். பொது­வாக பாது­காப்பை பல­மான நிலையில் வைத்­தி­ருப்­ப­தற்­காக இத்­த­கைய எச்­ச­ரிக்­கைகள் புல­னாய்வுப் பிரி­வு­களால் விடுக்­கப்­ப­டு­வது வழக்கம்.
ஆனால், அது ஒரு ஊகத்தின் அடிப்­ப­டை­யி­லான எச்­ச­ரிக்­கை­யா­கவே இருக்­க­லாமே தவிர, அதனை திட்டம் என்று கூற முடி­யாது. திட்­டத்­துக்கும் ஊகத்­துக்கும் வேறு­பாட்டைப் புரிந்து கொள்­ளாமல் ஜனா­தி­பதி பேசி­யி­ருக்­கி­றாரா தெரி­ய­வில்லை.
சென்­னையில் இருந்து விமா­னத்தைக் கடத்­தியோ, அல்­லது வேறு வழி­யிலோ கொழும்பின் மீது தாக்­குதல் நடத்த இந்­தியா அனு­ம­தித்­தி­ருக்­குமா- அத்­த­கைய ஒரு மோச­மான பாது­காப்பு நிலையில் தான் இந்­தியா இருக்­கி­றதா- என்ற கேள்வி இங்கு எழு­கி­றது.
இறுக்­க­மான பாது­காப்பை இந்­தியா நடை­மு­றைப்­ப­டுத்­தி­யி­ருந்த அந்தச் சூழலில், சென்­னையில் இருந்து விடு­தலைப் புலிகள் ஒரு விமானத் தாக்­கு­தலை நடத்­து­வது கற்­பனை கூட செய்து பார்க்க முடி­யாத விடயம்.
இதை­யெல்லாம் ஒரு பெரிய விவ­கா­ர­மாக்கி, அதற்கும் மஹிந்த ராஜபக் ஷ, சரத் பொன்சேகா ஆகியோரின் வெளிநாட்டுப் பயணங்களுடன் முடிச்சுப் போட்டு, பரபரப்பை ஏற்படுத்துவதில் ஜனாதிபதி வெற்றி கண்டிருக்கிறார்.
ஆனால், அவரது இந்தக் கருத்துக்கள், பதில் பாதுகாப்பு அமைச்சராக, கடைசி நேரத்தில் நானே போரை வழிநடத்தினேன் என்பதில் உள்ள உண்மையின் வலிமையை குறைத்து விட்டன என்றே கூறலாம்.
இதுபோன்று பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரபரப்பான தகவல்களை வெளியிடுவது என்ற பெயரில் தனக்குத் தானே குழி வெட்டியிருக்கிறார்.
ஜனாதிபதி பொறுப்பு வாய்ந்த கருத்துக்களை வெளியிடுவதே புத்திசாலித்தனமானது. கண்ணை மூடிக் கொண்டு எதையும் பேச முனைந்தால், அது அவருக்கே கடைசியில் ஆப்பாக முடியும்.
ஜனாதிபதியின் நியூயோர்க் கருத்துக்களும் கூட அவ்வாறு தான் மாறியிருக்கிறது. இதனை விட, அவர் எதையும் பேசாமல் இருந்திருந்தால் கூட அவரது மதிப்பு காப்பாற்றப்பட்டிருக்கும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad