கடந்த அரசாங்கத்தினால் சில முக்கியஸ்தர்களிற்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் உயிர்அச்சுறுத்தல் என்ற போர்வையில் குறித்த பாதுகாப்பை பெற்ற அமைச்சர்களான ரிசாட் பதியுதீன் மனோ கணேசன் ரவூப் ஹக்கீம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரனம் சுமந்திரன் ஆகியோரின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் முன்னாள் பிரதமருக்கு வழங்கப்பட்ட அனைத்து விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பும் நீக்கப்பட்டமை யாவரும் அறிந்ததே.
கடந்த உள்ளூராட்சித் தேர்தல் காலப்பகுதியில் எஸ்ரிஎவ் பாதுகாப்புடன் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்குச் சென்றிருந்த சுமந்திரன் அங்கு மக்களை வரிசையில் விட்டு எஸ்ரிஎவ் மற்றும் பொலிசாரினால் உடற்பரிசோதனை செய்திருந்ததும் தெரிந்ததே.
No comments:
Post a Comment