மகிந்த ராஜபக்சே என்கிற நாடாளுமன்ற உறுப்பினரை தான் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் சந்தித்தாக சுமந்திரன் சொல்லி இருக்கிறார் .
மகிந்த ராஜபக்சேவை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என சொல்லியது கெத்து என அரை வேக்காடுகள் சில பதிவிடுகின்றன .
இங்கே சுமந்திரன் சொல்லுவது போல மகிந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் protocol அடிப்படையில் அவர் தானே எதிர்க்கட்சி தலைவரை சந்திக்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை தேடி சென்று சந்திக்கும் அவசியம் என்ன? மகிந்த கட்சி தலைவர் கூட கிடையாது. எதிர் கட்சி தலைவர் பதவி நாடாளுமன்றத்தில் 3 ஆவது பெரிய பதவி. அமைச்சரவை அமைச்சருக்கு நிகரானது .
நாங்கள் வார்த்தைகளில் எவ்வளவு காலத்திற்கு விளையாட போகிறோம்? செய்ய வேண்டிய விஷயங்களில் அரசியல் தரப்புகள் அக்கறை காட்ட வேண்டும். சமூக தளங்கள் குறைந்த பட்சம் நேர்மையாக இருக்க வேண்டாமா?
......
இதனைவிட சந்திப்பின் பின், சுமந்திரன் இவ்வாறு மகிந்த என்ற தனிநபரைதான் சந்தித்தோம் என சொல்வது, தமிழர் தரப்பாக சாணக்கியமா? இதுதான் பேரம் பேசும் இராசதந்திரமா? என்பதையும் நாம் சிந்திக்கவேண்டும்.
......
இதற்கும் மேலாக, சந்திரிகா 2000 இல் கொண்டுவந்த தீர்வுபொதியை ஏற்றால் மகிந்தவை ஆதரிக்க தயார் என சொன்னதாக சொல்ல, அது முழுப்பொய் என்கிறார் மகிந்த தரப்பு சார்பாக பேசவல்ல வித்தியாதரன்.
இந்த ஏமாற்றுகள் எதுவரை?
- சமூகவலை பதிவுகள் -
No comments:
Post a Comment