TMK யும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் - பி. மாணிக்­க­வா­சகம் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, October 28, 2018

TMK யும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் - பி. மாணிக்­க­வா­சகம்

வடமாகாணசபையின் பதவிக்காலம் முடிவடைந்த சூட்டோடு சூடாக அதன் முதலமைச்சர் புதிய அரசியல் கட்சியொன்றைத் தொடங்கி தனது அரசியல் பயணத்தை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துவிட்டார். அவர் தனது அரசியலைவிட்டு, ஒதுங்கி இருக்கமாட்டார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்த போதிலும், பொதுவாக புதிய அரசியல் கட்சியொன்றை அல்லது புதியதோர் அரசியல் முன்னணியைத் தொடங்கப் போவதாகவே அவருடைய அறிவித்தல் அமைந்திருக்கும் என்ற வெறுமனான எதிர்பார்ப்பே அரசியல் வட்டாரங்களில் மேலோங்கியிருந்தது.

ஆனால் அந்த எதிர்பார்ப்பைப் புறந்தள்ளி, தான் ஆரம்பிக்கவுள்ள புதிய அரசியல் கட்சியின் பெயரை ‘தமிழ் மக்கள் கூட்டணி’ என துல்லியமாக அறிவித்துள்ளார். இது, அரசியல் வட்டாரங்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த அறிவிப்பு அரசியல் கட்சிகளையும்கூட வியப்பிலும், திகைப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையுடனும், இலங்கைத் தமிழரசுக் கட்சியுடனும் முரண்பாடுகளைக் கொண்டிருந்த முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன், வடமாகாண முதலமைச்சர் என்ற தனது அந்தஸ்து காலத்தில், அவருடைய அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும், அது தொடர்பான முடிவு என்ன என்பது குறித்து வெளிப்படையான தகவல்களை வெளியிடவே இல்லை.

தனக்கு முன்னால் நான்கு தெரிவுகள் இருக்கின்றன என்றும், அந்த நான்கில் ஏதாவது ஒன்றையே தான் தெரிவு செய்யப்போவதாகவும் பூடகமாகக் கூறியிருந்த அவர், தனது எதிர்கால அரசியல் நிலைப்பாடு குறித்த முடிவு அக்டோபர் 24 ஆம் திகதி வெளியிடப்படும் என்ற முன்னறிவித்தலை மட்டுமே தெரிவித்திருந்தார். இதனால் அவருடைய முடிவை அறிவதில் பெரும் ஆர்வத்தையே பொதுவாக ஏற்படுத்தியிருந்தது.

வடமாகாண சபைத் தேர்தலில் 2013 ஆம் ஆண்டு, மக்கள் மத்தியில் வடமாகாண முதலமைச்சர் என்ற அந்தஸ்தில், கிடைத்திருந்த ஆதரவு என்ற அரசியல் அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த கட்டமாக அவர் எத்தகைய அரசியல் நிலைப்பாட்டை முன்னெடுக்கப் போகின்றார் என்பதை அறிவதில் பலரும் ஆர்வம் கொண்டிருந்தனர்.

மறுபக்கத்தில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் புரட்சிகர முன்னணி ஆகிய கட்சிகள், மக்கள் மத்தியில் விக்னேஸ்வரன் பெற்றிருந்த அரசியல் செல்வாக்கை மூலதனமாகவும், தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் அவருக்கு ஏற்பட்டிருந்த முரண்டிபாட்டைத் தமக்கு சாதகமான ஓர் அரசியல் நிலைமையாகவும் பயன்படுத்திக் கொள்வதற்கு முனைந்திருந்தன.

மக்கள் செல்வாக்கு என்ற அடையாளத்தின் கீழ் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு மாறாக, மாற்று அரசியல் அணியொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளில் அந்த இரண்டு கட்சிகளும், சில பொது அமைப்புக்களும் ஆர்வம் காட்டியிருந்தன. இருப்பினும், மாற்று அரசியல் தலைமையொன்றை உருவாக்குவதற்கு முதலில் இணங்கி வர மறுத்திருந்த விக்னேஸ்வரன், இறுதியில் சிவில் அமைப்புக்களுடைய எழுச்சியின் ஊடாக தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து செயற்படுவதற்கு இணங்கியிருந்தார்.

இருப்பினும்இ நேரடியாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுவடுவதைத் தவிர்த்துஇ ஓர் அழுத்தக்குழுவாக, மக்களுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் இடையில் ஓர் இணைப்புப் பாலமாக இருந்து செயற்படுவது என்பதே தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாடு என்று வெளிப்படுத்தப்பட்டிருந்தது. தமிழ் மக்கள் பேரவையின், நேரடி அரசியல் தொடர்பில்லாத நிலைப்பாட்டை விரும்பி ஏற்றுக்கொண்ட விக்னேஸ்வரன், தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சார்ந்த வடமாகாண முதலமைச்சர் என்ற அந்தஸ்துடன், பேரவையின் இணைத் தலைவராகச் செயற்பட முன்வந்து, அதனை நடைமுறைப்படுத்தியிருந்தார்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) என்பன இணைந்திருந்த போதிலும், நேரடியான அரசியல் நடவடிக்கைகளிலோ அல்லது தேர்தல்களிலோ ஈடுபடுவதற்குரிய தளமாக தமிழ் மக்கள் பேரவை அமையவில்லை.

இத்தகைய ஒரு பின்னணியிலேயே, தமிழர் அரசியலில் ஓர் அழுத்தக்குழுவாக எழுச்சி பெற்றுள்ள தமிழ் மக்கள் பேரவையின் துணையோடு, தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய அரசியல் கட்சியை தான் ஆரம்பிக்கவுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

பங்கேற்காத பேரவையின் பங்காளிகள்

மாற்று அரசியல் அணியொன்றை உருவாக்க வேண்டும் என்ற அரசியல் முனைப்பைக் கொண்டுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈழமக்கள் புரட்சிகர முன்னணி போன்ற அரசியல் கட்சிகளின் நேரடி பங்களிப்பை புதிய கட்சியாகிய தமிழ் மக்கள் கூட்டணி பெற்றிருப்பதாகத் தெரியவில்லை.

விக்னேஸ்வரனின் அரசியல் போக்கிற்கு, இந்த இரண்டு கட்சிகளும் ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தாலும்கூட, தமிழ் மக்கள் கூட்டணியின் உருவாக்கத்தில் அந்தக் கட்சிகளை விக்னேஸ்வரன் உள்ளடக்கியிருக்கவில்லை. இதன் காரணமாகவே, தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயர் சூட்டப்பட்ட விக்னேஸ்வரனின் புதிய அரசியல் கட்சி பற்றிய அறிவித்தல் அந்தக்கட்சிகளை வியப்படையச் செய்திருக்கின்றது.

தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்திலும், அதன் செயற்பாடுகளிலும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும், ஈழமக்கள் புரட்சிகர முன்னணியும் பெரும் பங்காற்றியிருந்தன. முதலமைச்சராக இருந்த போது, விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டபோதும் இந்தக் கட்சிகள் தமிழ் மக்கள் பேரவையைப் போலவே, அவருக்குத் துணையாக இருந்து செயற்பட்டிருந்தன.

புதிதாக மாற்று அரசியல் அணியொன்றை உருவாக்கும் முயற்சியில் முதலமைச்சர் பதவியில் இருந்த விக்னேஸ்வரனை, அவருடைய மக்கள் செல்வாக்கு என்ற அரசியல் அடையாளத்தின் அடிப்படையில் இந்த இரண்டு கட்சிகளும் முதன்மைப்படுத்தியிருந்தன. ஆனால், உள்ளுராட்சித் தேர்தலின்போது, இந்த மாற்று அணியை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தனித்து தேர்தலில் போட்டியிடுவதற்கு முடிவெடுத்திருந்தது. அதேவேளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் சின்னமாகிய வீட்டுச் சின்னத்திற்கு ஈடு கொடுத்து, தேர்தலில் வெற்றிபெறுகின்ற நோக்கத்தில், மக்கள் மத்தியில் முன்னர் பிரபல்யம் பெற்றிருந்த உதயசூரியன் சின்னத்தைத் தெரிவு செய்து, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரியுடன் ஈழமக்கள் புரட்சிகர முன்னணி கூட்டிணைந்திருந்தது. தனித்துப் போட்டியிட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மக்களுடைய ஆதரவைப் பெற்று தேர்தலில் குறிப்பிட்டு கூறத்தக்க வகையில் வெற்றிபெற்றது.

ஆனால்இ எதிர்பார்த்த அளவில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வெற்றி பெறவில்லை. இதனால் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கொண்டிருந்த அணி சார்ந்த இணைவு அற்றுப்போனது. இதற்கு தேர்தல் தோல்வியுடன் வேறு காரணங்களும் கூறப்படுகின்றது.

முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனை முன்னிலைப்படுத்தி அல்லது மையப்படுத்தி மாற்று அணியொன்றை உருவாக்க வேண்டும் என்ற அரசியல் ரீதியான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருந்தன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான புளொட் மற்றும் டெலோ ஆகியவற்றுடனும்கூட இது தொடர்பிலான கலந்துரையாடல் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் உண்டு. ஆனால் அந்த முயற்சிகள் பற்றிய விரிவான தகவல்கள் வெளிவரவில்லை. அத்துடன் அந்த முயற்சிகளும் முன்னேற்றம் காணவில்லை.

உள்ளுராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மக்கள் மத்தியில் தனக்குக் கிடைத்துள்ள ஒர் அங்கீகாரமாகவும், தனது கொள்கைகளுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த அரசியல் ரீதியான ஆதரவாகவும் கருதி, அந்த ஆதரவை மேலும் மேலும் வளர்த்தெடுப்பதில் குறியாகச் செயற்பட்டு வருகின்றது. இந்த நிலையில் விக்னேஸ்வரனுடனோ அல்லது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியுடனோ கூட்டுச் சேர்வதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கே அது வந்துள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணியை உருவாக்கிய விக்னேஸ்வரன், மாபெரும் மக்கள் அணிதிரள்வின் மத்தியில் அதுபற்றி பிரகடனப்படுத்த எண்ணியிருந்தார். அந்த நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் புளொட் ஆகிய தமிழ் மக்கள் பேரவையின் பங்காளி சக்திகளும் கலந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்த போதிலும், அவற்றில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மாத்திரமே கலந்து கொண்டது.

கரகோஷங்கள் விசிலடிப்புக்கள்

தமிழ் மக்களுக்கு தேர்தல் காலத்தில் அளித்த உறுதிமொழிகளுக்கு ஏற்ப தமிழ்;த்தேசிய கூட்டமைப்பு செயற்படவில்லை. அரசாங்கத்திற்கு அது வழங்கி வருகின்ற நிபந்தனையற்ற ஆதரவு என்பது மக்கள் நலன் சார்ந்ததல்ல. மாறாக சுய அரசியல் இலாபத்தை இலக்காகக் கொண்டே அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை கூட்டமைப்பு வழங்கி வருகின்றது என்பது பொதுவான அரசியல் குறைபாடு. மாற்று அணியினரால் முன்வைக்கப்பட்டு வருகின்ற பொதுவான குற்றச்சாட்டுமாகும்.

இதே குற்றச்சாட்டை முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் முன்வைத்து வந்துள்ளார். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அவர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பையும், அதன் தலைவர்களையும் அண்மைக்காலமாக நேரடியாக விமர்சிக்கத் தொடங்கியிருந்தார். கூட்டமைப்பினருக்கு அரசியல் தெரியாது என்ற அளவில் அவருடைய விமர்சனம் கடுமையாக இருந்தது. தனது புதிய அரசியல் கட்சியைப் பெயர் குறிப்பிட்டு அவர் பிரகடனப்படுத்திய நிகழ்விலும் கூட்டமைப்பின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சிக்கத் தவறவில்லை. கூட்டமைப்பு விட்ட தவறே, புதிய கட்சியொன்றை ஆரம்பித்து, தன்னை அரசியலில் தொடர்ந்து பயணிக்கச் செய்துள்ளது என்று அவர் தன்னிலை விளக்கத்தையும் அளித்திருந்தார்.

முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அடுத்த கட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து வெளிப்படுத்துதவற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வுஇ அவரும் அவரைச் சார்ந்தவர்களும் எதிர்பார்த்தவாறே பெரிய அளவில் நடந்தேறியுள்ளது. பல இடங்களில் இருந்தும் பெரும் எண்ணிக்கையானோர் இதில் கலந்து கொண்டிருந்தனர். வரலாறு காணாத வகையிலான அரசியல் கூட்டங்களில் இதுவும் ஒன்று என்ற அளவில் அந்த கூட்டம் நடந்து முடிந்தது. அந்த நிகழ்வில் முக்கிய உரையாற்றியபோது, விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்களுக்கு அங்கு கூடியிருந்தவர்கள் தமது உணர்வுகளை பரவலாக வெளிப்படுத்தியிருந்தார்கள். பல தடவைகள் எழுந்த கரகோஷங்களும் விசிலடிப்புக்களும் அங்கிருந்தவர்கள் உணர்வுபூர்வமாகவே அங்கு குழுமியிருந்தனர் என்ற உணர்வை ஏற்படுத்தியிருந்தது.

பெரிய அளவில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு பொதுவாகவே இருந்த போதிலும், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் எழுச்சியை விரும்பாத அல்லது சகிக்க முடியாத சக்திகள் இங்கு மக்கள் குறைந்த அளவிலேயே வருவார்கள் என்றே எதிர்பார்த்திருந்தன. ஆயினும் அந்த கூட்டம் பெரிய அளவில் நடைபெற்றமை அந்த சக்திகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்த உணர்வையே ஏற்படுத்தியிருக்கின்றது.

மாற்று அணியினர் எதிர்பார்த்ததிலும் பார்க்க விக்னேஸ்வரன் செல்வாக்கு மிக்கவராக இருக்கின்றார் என்ற கசப்பான உண்மையை இந்த கூட்டம் உணர்த்தியிருக்கின்றது. அந்த உணர்வு அவர்களை அரசியல் ரீதியாக எச்சரிக்கை அடையவும், அதற்கு ஏற்ற வகையில் அரசியல் செயற்பாடுகளில் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்வதற்கான சிந்தனையையும் தூண்டியுள்ளது என்றே கூற வேண்டும்.

தமிழ் மக்கள் கூட்டணி உதயமாவதற்கு முன்பு ஒரு முன்னோட்டத்தைப் போன்று வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரனும் புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்கியுள்ளதாக அறிவித்திருக்கின்றார். ஒற்றுமையும், ஒரு தலைமையின் கீழான பலமுள்ள ஓர் அரசியல் தலைமையும் தேவைப்படுகின்ற இன்றைய தமிழ் அரசியல் அரசங்கில், இந்த இரண்டு கட்சிகளினதும் தோற்றமானது, தமிழ் மக்களின் அரசியல் ரீதியான செயற்பாடுகளை பலவீனமடையச் செய்யவே வழிவகுத்துள்ளன.

விக்னேஸ்வரன் தொடங்கியுள்ள புதிய அரசியல் கட்சியானது தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பொருத்தமட்டில், அதன் செயற்பாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை என்று கூட்டமைப்பு தரப்பில் கருதப்பட்ட போதிலும், அடுத்தடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களில் அதன் தாக்கம் வெளிப்படவே செய்யும் என்பதில் ஐயமில்லை.

அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள்

யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்களாகப் போகின்ற நிலையில் தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக விழிப்படைந்தவர்களாகவும், அவர்களுடைய அரசியல் தலைமைகள் சாணக்கியமும் அரசியல் ரீதியாக செயல் வல்லமையும் கொண்டவையாகவும் இருக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றார்கள்

No comments:

Post a Comment

Post Bottom Ad