தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியை சேர்ந்த ஒருவரின் கடிதம் என பொய்யான கடிதம் மூலம் சேறுபூச முற்பட்டவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது.
இது தொடர்பாக இறுதிப்போரில் காணாமல் ஆக்கப்பட்டவரின் தந்தையும் உள்ளாட்சி உறுப்பினருமான சிவராசா அறக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
போலிக்கடிதம் தொடர்பான மறுப்பறிக்கை
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசபையின் (கரவெட்டி பிரதேச சபை) செப்ரம்பர் மாத, மாதாந்தக்கூட்டம் கடந்த 13.09.2018 நடைபெற்றது.
அக்கூட்டத்தில் முள்ளியில் அமையவுள்ள கழிவகற்றும் தொகுதி அமைப்பது தொடர்பாக, அக்காணியை சுத்தப்படுத்தல் சம்பந்தமாக கடும் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன.
தவிசாளர் ஐங்கரன் "இராணுவத்தை" பயன்படுத்துவதற்கு சபையின் அனுமதியைக் கோரினார்.
அக்கோரிக்கையை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கடுமையாக எதிர்த்தது. இறுதியில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது முன்னணியின் 7 பேரும் எதிர்த்து வாக்களித்தார்கள். ஆனந்தசங்கரியின் கட்சியைச்சேர்ந்த 3பேரில் இருவரும் எதிர்த்து வாக்களித்தார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி, ஐக்கியதேசியகட்சி, சுதந்திரக்கட்சி, ஆனந்தசங்கரியின் ஒரு உறுப்பினர் ஆதரவாக வாக்களித்தனர்.
இதன்பின்பு,மறுநாள் 14.09.20 18 தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் த.சிவராசா அவர்களின் வீட்டிற்குச்சென்ற 4 பேர் தம்மை காவல்துறை என்று கூறி விசாரித்துச் சென்றனர்.
சபையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டிற்கு பொதுமக்களிடம் இருந்து அமோக ஆதரவு கிடைத்தது. இந்நிலையில் உறுப்பினர் த.சிவராசா அவர்களின் பெயரில் நெல்லியடியில் உள்ள 'சிதம்பரக்காணிகள்' சம்பந்தமாக ஒரு கடிதம் இந்திய துணைத்தூதர் அலுவலகத்திற்கு அனுப்பியதாக கூறப்படும் கடிதம் ஒன்றை, கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் வெளியிட்டுள்ளார்.
கூட்டமைப்பின் அரசியல் ஆதாயத்திற்காக செய்யப்படும் இவ்வகையான கடிதங்களை மக்கள் புரிந்துகொள்வார்கள்.
- தம்பையா சிவராஜா
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை உறுப்பினர்
02.10.2018
No comments:
Post a Comment