வடக்கு, கிழக்கு, மலையக பகுதிகளில் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்க வேலைத்திட்டங்கள் அவசியம்
2018 ஆம் ஆண்டின் இரண் டாவது காலாண்டின் புள்ளி விப ரங்களின் பிரகாரம் 381,834 பேர் வேலையற்றவர்களாக இருக்கின்றனர். இதில் இளை ஞர்களே அதிகமாக இருக்கின் றனர். அத்துடன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத் துக்கும் குறைவான தகுதியை கொண்ட வர்கள் 137,615 பேர் வேலை யற்றவர்களாக உள் ளனர். கல்விப் பொதுத் தராதர உயர் தரம் மற்றும் அதற்கும் மேல் தகைமையை கொண்டவர்கள் சுமார் 170 ஆயிரம் பேர் வேலை யின்றி இருப்பதாக புள்ளி விபர திணைக்களத்தின் தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன. அதிலும் 30 வயதுக்கு மேற் பட்டோர் சுமார் 90 ஆயிரம் பேர் வேலையற்று இருக்கின்றனர்.
நாட்டில் 10 இலட்சம் புதிய தொழில்வாய்ப்புக்களை புதிதாக உருவாக்குவதாக நல்லாட்சி அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு தெரிவித்திருந்தது. வேலையின்மையை குறைப்பதை நோக்கமாகக்கொண்டே இந்த வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் பதவிக்காலம் 2020 ஆம் ஆண்டுடன் நிறைவடையவுள்ள நிலையில் எந்தளவு தூரம் இந்த இலக்கு அடையப்பெற்றுள்ளது என்பதை ஆராயவேண்டியுள்ளது.
இது தொடர்பில் அரசாங்கம் பல்வேறு புள்ளிவிபரங்களை வெளியிடுகின்றது. ஆனால் உண்மையில் தற்போதைய சூழலில் வேலையின்மை வீதம் எவ்வாறு உள்ளது? புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்க என்ன செய்யவேண்டும்? சர்வதேச முதலீடுகளை கவருவதற்கு என்ன தேவையை பூர்த்தி செய்யவேண்டும் ? யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வேலையின்மையின் நிலைமை என்ன? அப்பகுதிகளில் புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த என்ன செய்யவேண்டும் ? என்பன தொடர்பில் பார்க்கவேண்டியது அவசியமாகின்றது.
தற்போதைய நிலைமையில் வேலையின்மை வீதமானது குறைந்த மட்டத்தில் பதிவாகியிருந்தாலும் அது இன்னும் சாதகமான நிலைமைக்கு வரவில்லை. 2018 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டாகும்போது வேலையின்மை வீதமானது 4.6 வீதமாக பதிவாகியிருந்தது.
கடந்த 2017 ஆம் ஆண்டில் வேலையின்மை வீதமானது 4.2 வீதமாக பதிவாகியுள்ளது. 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வேலையின்மை வீதமானது சுமார் நான்கு வீதம் அல்லது ஐந்து வீதத்துக்கு குறைவாகவே நீடித்து வருகின்றது. 2013 ஆம் ஆண்டில் வேலையின்மை வீதமானது 4.4 ஆகவும் 2014 ஆம் ஆண்டில் 4.3 வீதமாகவும் 2015 ஆம் ஆண்டில் 4.7 வீதமாகவும் 2016 ஆம் ஆண்டில் 4.4 வீதமாகவும் பதிவாகியிருந்ததாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று எண்ணிக்கையில் பார்க்கும்போது 2018 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டின் புள்ளிவிபரங்களின் பிரகாரம் 381834 பேர் வேலையற்றவர்களாக இருக்கின்றனர். இதில் இளைஞர்களே அதிகமாக இருக்கின்றனர். அத்துடன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்துக்கும் குறைவான தகுதியை கொண்டவர்கள் 137615 பேர் வேலையற்றவர்களாக உள்ளனர். கல்விப் பொதுத் தராதர உயர் தரம் மற்றும் அதற்கும் மேல் தகைமையை கொண்டவர்கள் சுமார் 170 ஆயிரம் பேர் வேலையின்றி இருப்பதாக புள்ளிவிபர திணைக்களத்தின் தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன. அதிலும் 30 வயதுக்கு மேற்பட்டோர் சுமார் 90 ஆயிரம் பேர் வேலையற்று இருக்கின்றனர்.
இது முழு நாட்டினதும் வேலையின்மை வீதம் தொடர்பான தகவல்களாக உள்ளன. இந்நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஊவா மற்றும் மலையக பிரதேசத்திலும் அதிகளவு வேலையின்மை வீதம் பதிவாகிவருகின்றது. இவை தொடர்பிலும் கவனம் செலுத்தவேண்டும்.
வேலையின்மை வீதம் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணிகள் காணப்படுகின்றன. சனத்தொகை அதிகரிப்பு புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும் செயற்பாடு செயற்திறனற்றதாக இருத்தல் முதலீடுகள் அதிகரிக்காமை பொருளாதார கட்டமைப்பில் காணப்படுகின்ற அடிப்படை பிரச்சினைகள் சேமிப்பு குறைவடைதல் சிறிய நடுத்தர வர்த்தக தொழில் முயற்சியாளர்கள் ஊக்குவிக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இதில் தாக்கம் செலுத்துகின்றன.
எனவே இவை தொடர்பில் கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகின்றது. குறிப்பாக எமது நாட்டின் ஏற்றுமதி அதிகரிக்கப்படவேண்டும். ஏற்றுமதிகள் அதிகரிக்கவேண்டுமாயின் ஏற்றுமதி உற்பத்தி அதிகரிக்கவேண்டும். அத்துடன் உள்நாட்டு வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கவேண்டும். இவற்றுக்கான சூழல் உருவாகும்போது புதிய தொழில்வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
எனவே அரசாங்கம் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதற்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச நாடுகளிலிருந்து அதிக முதலீடுகளை கவர நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்காக முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த விடயத்தில் சர்வதேச நாடுகளுடன் செய்துகொள்ளப்படும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் முக்கியமானவையாக அமையலாம். ஆனால் அவை எமது நாட்டுக்கு சாதகமாக இருக்கவேண்டும். அவற்றினால் அதிகளவு பாதிப்பு எமது நாட்டுக்கு ஏற்படாமல் இருக்கவேண்டும்.
இதேவேளை யுத்தம் நடைபெற்ற வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வேலையின்மை அதிகமாக பதிவாகின்றது. இது தொடர்பில் அரசாங்கம் கவனத்திற்கொள்ளவேண்டியது அவசியமாகின்றது. குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகளவு வேலையின்மை வீதம் பதிவாகின்றது.
அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டில் வேலையின்மை வீதம் 4.2 வீதமாக பதிவாகியிருக்கும்போது அதன் வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதாவது வட மாகாணத்தின் வேலையின்மை வீதமானது 7.7 வீதமாக உள்ளது. இதுவே அதிகமான வீதமாக பதிவாகியுள்ளது. இரண்டாவதாக கிழக்கு மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தில் வேலையின்மை வீதமானது 6 ஆக அமைந்துள்ளது. இந்த இரண்டு மாகாணங்களிலேயே அதிகளவு வேலையின்மை வீதம் பதிவாகியுள்ளது.
ஏனைய மாகாணங்களில் வேலையின்மை வீதம் குறைவாகவே உள்ளது. மாவட்டங்களை எடுத்து நோக்கும்போது யாழ்ப்பாண மாவட்டமே மிக மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளது. இந்த மாவட்டத்தில் வேலையின்மை வீதமானது 10.7 வீதமாக காணப்படுகின்றது. இரண்டாவது அதிகூடிய வேலையின்மை நிலவும் மாவட்டமாக 6.6 வீதத்துடன் மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது.
அதேபோன்று அதற்கடுத்த மூன்றாவது இடத்தில் வேலையின்மை கூடிய மாவட்டமாக 6.4 வீதத்துடன் திருகோணமலை மாவட்டம் காணப்படுகின்றது. அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் வேலையின்மை வீதமானது 6.1 வீதமாக காணப்படுகின்றது. அந்தவகையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு கிளிநொச்சி மற்றும் திருமலை ஆகிய மாவட்டங்களில் அதிகளவு வேலையின்மை வீதம் நிலவுகின்றது.
எனவே இந்த நிலைமை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகளவான முதலீடுகளை செய்து அங்கு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும். இது தொடர்பில் அண்மையில் இலங்கையின் பொருளாதார நிலை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த உலக வங்கி போருக்குப் பிந்திய காலப்பகுதியில் உறுதியாகக் கால்பதித்துள்ள இலங்கை தற்போது எதிர்காலத்தை நோக்கிய பார்வையைச் செலுத்துவதுடன் வறுமையை முடிவிற்கு கொண்டுவருவதற்கான ஒவ்வொரு வாய்ப்புக்களையும் தழுவிக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
அத்தோடு புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதுடன் நெகழ்வுத்திறன் கொண்ட வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவேண்டும் என்றும் உலக வங்கி தெரிவித்திருந்தது.
அந்தவகையில் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதற்கான அனைத்து சந்தர்ப்பங்களையும் தழுவிக்கொள்ள அரசாங்கம் முன்வரவேண்டும். அதனூடாகவே வேலையின்மை பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். அத்துடன் நாட்டின் உற்பத்தி பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.
அதாவது ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களை உற்பத்தி செய்யும் நிலைமை அதிகரிக்கவேண்டும். அதற்கேற்றவாறான முதலீடுகளை கவரவேண்டும். ஏற்றுமதி வருமானத்தைப் பொறுத்தவரை எமது நாடு இன்னும் மந்த கதியிலேயே செயற்பட்டுவருவதை காண முடிகின்றது. ஏற்றுமதியை பொறுத்தவரை பெருந்தோட்ட உற்பத்திகள் ( தேயிலை ரப்பர் ) மற்றும் கைத்தொழில் உற்பத்திகளிலேயே நாங்கள் தங்கியுள்ளோம். பெருந்தோட்ட உற்பத்திகளில் தேயிலை பிரதானமாகவும் கைத்தொழில் உற்பத்திகளில் ஆடை உற்பத்திகள் பிரதானமாகவும் உள்ளன.
இந்நிலையில் கடந்த 10 வருடங்களை நோக்கும் ஏற்றுமதி வருமானம் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளபோதிலும் இன்னும் போதுமான வருமானத்தை நாடு பெறவில்லை என்றே தெரிகின்றது. எனவே தற்போதைய சூழலில் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்களை பலப்படுத்தும் வகையிலான திட்டங்களும் விரைந்து முன்னெடுக்கப்படவேண்டும். இதனூடாக கணிசமானளவு தொழில்வாய்ப்புக்களை அதிகரிக்க முடியும். தற்போதைய சூழலில் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்கள் பாரிய சிக்கல்களையும் நெருக்கடிகளையும் எதிர்நோக்கிவருகின்றனர். அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு அவர்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்த வேலைத்திட்டங்கள் அவசியமாகும். எனவே அரசாங்கம் என்ற ரீதியில் பலப்படுத்த வேலைத்திட்டங்கள் அவசியமாகும். எனவே அரசாங்கம் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ள புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment